உலக நாயகன் கமல் அவர்களின் அருகில் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா..? தற்போதைய டாப் நடிகர்களின் அப்பா தான்..!

தமிழ்த்திரையுலகில் முண்ணனி நடிகர்கள் பலரும் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இங்கு ஒரு முண்ணனி நடிகர் கமலஹாசனோடு பெண் வேடம் போட்டு நடித்துள்ளார். அந்தப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்நிலையில் அந்த பெண் எந்த நடிகர் என நெட்டிசன்கள் பதில் சொல்லி வருகின்றனர்.

நடிகர்கள் பெண் வேடம் தரிப்பது சிவாஜி கணேசன் காலம் தொட்டு நடந்தே வருகிறது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல், அக்ரகாரத்து மாமியாக பெண் வேட,ம் போட்டிருப்பார். இதேபோல் ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண் வேடம் போட்டிருந்தார். இப்படி ஒரு நீண்ட பட்டியலே சொல்லலாம். இப்போது இந்தப்படத்தில் அக்மார்க் பெண்ணைப் போலவே ஒருவர் இருக்கிறார்.

திடீரென இந்த புகைப்படத்தை பார்த்தால் கமல் உண்மையில் ஏதோ ஒரு பெண்ணுடன் நிற்பது போலவே தோன்றும். உண்மையில் அந்தப்பெண் வேடத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? முருகன் வேடங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் சிவகுமார் தான் அது!

You may have missed