இப்படி ஒரு என்ட்ரி கல்யாணப் பொண்ணு கொடுத்து பார்த்திருக்கவே மாட்டீங்க…

இன்றைய பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். முந்தைய காலப் பெண்களுக்கு அது இல்லை. இவ்வளவு ஏன் 2000வது ஆண்டுக்கு பின்புதான் பெண்கள் மிகப்பெரிய தைரியத்துடன் வெளிப்பட்டு வருகின்றனர். அதிலும் பெண் பருவ வயதை அடைந்துவிட்டாலே அவளை வீட்டுக்குள் சுருக்கிவிடும் கலாச்சாரம் இன்றும்கூட கிராமப் பகுதிகளில் இருக்கிறது.

ஆனால் சில பெண்கள் அந்த எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மிகவும் துணிச்சலாக இருப்பார்கள். இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கடினமான உடல் உழைப்பிலும் ஆண்களுக்கு இணையாக களத்தில் இருந்து மிளிர்கின்றனர்.

கனரக வாகனங்களையும் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். இங்கே தன் திருமணத்தில் கூட வட இந்தியாவைச் சேர்ந்த சிங்கப்பெண் ஒருவர் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

வட இந்தியாவில் கோலோகலமாக இந்த திருமண ஏற்பாட்டை செய்திருந்தனர். அப்போது மணப்பெண், கல்யாண வீட்டுக்குள் முகூர்த்தப்பட்டு, அலங்காரம், கழுத்து நிறைய அணிகலன்களோடு பைக்கில் தன் கல்யாணத்திற்கு வந்தார். இந்த சிங்கப்பெண்ணின் இந்த செயலைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரல் வைத்துவிட்டனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

You may have missed