காதல் பட நாயகி சரண்யாவா இது…. தற்போது எப்படி இருகாங்க பாருங்க..!

காதல் படம் 2004-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ஆகும்.பரத் கதநாயகனாக சந்தியா கதநாயகியாக அறிமுகம் ஆன படம் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம், மேலும் இயக்குனர் சங்கர் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட படமும் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக அறிமுகம் ஆனவர் சரண்யா. உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா….என்ற நக்கலான வரிகளுக்கு சொந்தக்காரர்.

நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் கோடம்பாக்கம் துர்கா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றுள்ளார். காதல் படத்தில் கதநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் தான்.அப்போது 9-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார், மேலும் மிக இளமையான தோற்றத்தில் இருந்ததால் அந்த வாய்ப்பு சந்தியாவிற்கு சென்றது. அதன் பிறகு பெரிதாக அவரின் படங்கள் வெளிவரவில்லை.

ஜெயம் ரவியின் பேராண்மை படம் 2009-ல் வெளிவந்தது, இதில் 4 கதாநாயகிகளில் ஒருவராக வந்து மக்கள் இடத்தில் பிரபலம் அடைந்தார். மேலும் அவரின் படங்களை மக்கள் எதிர்பார்த்தலும் பெரிய அளவில் அவருக்கான இடம் படங்களில் இல்லாமல் போனது. இதற்கிடையில் வதந்திகளும் உலவ அவரின் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவராமல் போனது.

தற்சமயம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவரின் அனுபவங்கள், இன்னல்கள், எதிர்பார்ப்புகள் பற்றிய செய்திகளை பேட்டி அளித்துள்ளார்.அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…….

You may have missed