ஏய் சின்ன மச்சான் பாடல் புகழ் ராஜலக்ஷ்மி இது…… மாஸ் லுக்கில் வெளியான புகைப்படம்.. ஆடிப்போன நெட்டிசன்கள்..!

புஸ்பா படம் பாடலான ஏய்…..சாமி…பாடல் இந்தியா முழுவதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நாட்டுப்புற பாடகி ராஜலஷ்மி பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்தனர். விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ராஜலக்ஷ்மி பாடிய இந்த பாடல் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழியில் சூப்பர் ஹிட் ஆன பாடல். இதற்கு முன்பாக இவரது குரலில் டான்ஸ் மாஸ்டர், நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சபிளின்-2 படத்தில் பாடிய என்ன மச்சான் பாடலும் சூப்பர் ஹிட்டானது.

புதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த கறம்ப குடியில் பிறந்த ராஜலட்சுமிசெந்தில் தனது கணவர் செந்திலுடன் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்-6 இல் களம் கண்டனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றாலும் திரை துறையில் மாபெரும் வெற்றி வாகை சூடியது புஸ்பா படத்தின் மூலம். இவர்கள் இருவரும் நாட்டுப்புற பாடல்கள் பாடும் கலைஞர்கள், திருவிழாக்கள், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையின் மூலம் வளர்ச்சியை எட்டியுள்ளனர்.

செந்தில், ராஜலட்சுமி நாட்டுப்புற கலைஞர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது பெரிய திரையில் பாடி அசத்தி வரும் வேலையில் கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் ராஜலட்சுமியின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. சைலென்ஸ் என்ற திரைப்பட புகைப்படம் பிரமிப்பூட்டும் விதத்தில் இருப்பதாகவும் அடுத்து நடிக்கவும் களத்தில் இறங்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படத்தை இங்கே காணலாம்…..

You may have missed