கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..!

சிறுமி ஒருத்தி கொட்டும் மழையில் தனக்கு குடைபிக்காமல் தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு குடைபிடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது. மனிதாபிமானதுடன் நாய்க்கு குடைபிடித்த சிறுமி அந்த நாய் எங்கெல்லாம் செல்கிறதோ அதனுடனே சென்று தலைக்கு மேல் குடையை பிடிக்கும் வீடியோ அனைவருக்கும் பிடித்துள்ளது.

அந்த சிறுமி ரெயின்கோர்ட் அணிந்து கொண்டு கொட்டும் மழையிலும் தன்னுடைய நாய்யை மழையில் இருந்து காப்பதற்காக அதன் பின்னால் சென்று குடை பிடித்த காட்சிகள் மனதை கவரும் வண்ணம் இருக்கிறது என்று சமூக வலைதள வாசிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிறுமியை போன்று பேராசைகொண்டு பணம் சம்பாதிக்காமல், யாரையும் வெறுக்காமல், எந்த அதிகாரமும் கொள்ளாமல் சுதந்திரமாகவும், அன்புடனும் ஒருவருக்கொருவர் இருப்பதை பகிர்ந்துக்கொண்டு இருந்தால் இனி வரும் தலைமுறை செம்மையாக வாழும் என்று பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You may have missed