ஊர் விழாவில் பெண் வேடமிட்டு டேன்ஸில் பட்டையைக் கிளப்பிய இளைஞர்… என்ன ஒரு ஆட்டம் பாருங்க..

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு இளைஞர் நடனத்தில் சும்மா பட்டையைக் கிளப்பிவிட்டார். அதிலும் கிராமப்புற இளைஞரான அவர், பெண் வேடமிட்டு நடனத்தில் பட்டையைக் கிளப்பி விட்டார்.

பொதுவாகவே மெட்ரோ சிட்டிகளில் வசிப்பவர்களுக்கும், பெரிய, பெரிய பள்ளிக்கூடங்களில் படிப்பவர்களுக்கும் அதிகமான வாய்ப்புக் கிடைக்கும். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் போதிய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கிராமப் பகுதிகளில் அதற்கான சாத்தியக் கூறு இல்லை. கிராமப் பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் பொங்கல் விழாவுக்குத்தான் மேடை ஏறுவார்கள். அப்படி நிகழ்வுகளில் பங்கேற்போரை கிராம மக்களும் சேர்ந்து ஊக்கப்படுத்துவார்கள்.

அந்தவகையில் இங்கேயும் சில கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து பொங்கல் விழாவில் பட்டையைக் கிளப்பிவிட்டனர். அதிலும் அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞர் பெண் வேடமணிந்து வேற லெவலில் ஆடுகிறார். கிராமத்து நடனம் என்றாலே ராத்திரி நேரத்து பூஜையில் பாடல் தவிர்க்க முடியாததாகி விடும். அந்தப் பாடலுக்கும் செம ஆட்டம் போடுகிறார் இந்த இளைஞர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

You may have missed