குளிப்பதில் ஒழுக்கம் மட்டுமல்ல அறிவியலும் உள்ளது.. பல நோய்களை விரட்டும் ஆரோக்கிய குளியல்…

குளித்தால் நோய்கள் தீரும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். மனித உடலில் இரவு தூங்கி எழும்போது அதிக அளவு வெப்பக் கழிவுகள் தேங்கி இருக்கும். காலையில் இந்த வெப்பக் கழிவை அகற்றவே குளியல் போடுகிறோம். மனித உடலில் பெரும்பாலான நோய்களுக்கு அச்சாரம் இடுவதே உடம்பில் தங்கும் வெப்பம் தான்!

இன்று கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் ஊரில் உள்ள குளம், ஆறு என முங்கி உற்சாகக் குளியல் போடுவார்கள். நகர்ப்பகுதியில் இருப்பவர்கள் கிடைக்கும் கார்ப்பரேஷன் வாட்டருக்குள் கடமைக்கு குளித்து முடிக்கின்றனர். இந்த குளியலுக்கும் கூட சில விதிகள் இருக்கின்றன. நாம் குளிக்கும் போது உச்சத்தலையில் சூடு தண்ணீரை ஊற்றக் கூடாது. காரணம் உச்சத்தலை எப்போதும் குளிர்ச்சியாய் இருக்க வேண்டும்.

பொதுவாக நாம் வெந்நீரில் குளிப்போம். ஆனால் அது தவறு. எண்ணெய்க் குளியலின் போது மட்டுமே வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது எடுத்தவுடன் தலையில் ஊற்றக் கூடாது. நீரை முதலில் காலில் தான் ஊற்றணும்,. அதன் பின்னரே படிப்படியாக உடல் முழுவதும் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றும்போது தான் வெப்பம் கீழே இருந்து, மேல் எழும்பி, கண் மற்றும் காது வழியாக வெளியே செல்லும்.

குளித்துவிட்டு ஈரத்துணியோடு இருப்பது ரொம்ப நல்லது. அதே ஈரத்துணியோடு அரச மரத்தை சுற்றினால் தூய்மையான பிராண வாயுவை உடல் தோளின் வழியே கிரகத்துக் கொள்ளும். இதனால் தோல் வியாதிகளும் வராது.

You may have missed