காதலிப்பவரை அசால்டாக கழட்டிவிட்டு போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா.. இவர்களை காதலிப்பவர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க…

காதல் இல்லாத உலகம்…அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது.

காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், திருமணத்துக்குப் பின்பு காதல் செய்பவர்கள் மறுபக்கம். எது எப்படியோ கணவன், மனைவி இடையே காதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வசந்தமாகும். பதின் பருவக் காதல்கள் எப்போதுமே தடுமாற்றத்துக்கு உரியதாக இருக்கும். அதில் கொஞ்சம் கவனமாக இருந்து, வாழ்வில் நல்ல நிலையை அடைந்த பின் கைபிடிப்பது மிகவும் நல்லது.

காதல் தப்பே இல்லை. அதேநேரம் நாம் காதலிப்பவரை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதேநேரத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் காதலை மிக எளிதாக உதாசீனப்படுத்திவிடுவார்கள். தூக்கி எறிந்துவிடுவார்கள். அது என்ன ராசிக்காரர்கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தனுசு..

இவர்கள் தந்திரக்காரர்கள். இவர்களது பரந்த பார்வை எப்போதும் அடுத்த, அடுத்த சாகசத்தையே எதிர்நோக்கும். நீங்கள் அவர்களுடன் இல்லாத போது உங்களையே நினைப்பார்கள். இவர்கள் காதலை எளிதில் இடையில் பிரேக் அப் செய்யும் மனநிலைக் கொண்டவர்கள். இவர்களை காதலிப்பவர்களும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்,

கும்பம்..

சிக்கலான சிந்தனை கொண்டவர்கள் இவர்கள். இவர்களும் கோபத்தோடு காதலை உதாசீனப்படுத்த ஒருகட்டத்தில் தயங்க மாட்டார்கள். இவர்களை காதலிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் எதிர்ப்பு வந்தால் கூட இவர்களின் மனம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

மேஷம்..

இவர்கள் துரத்தி, துரத்தி காதலிப்பார்கள். அதே பிரச்னை என்று வரும் போது அதே வேகத்தில் காதலில் இருந்து வெளியேறிவிடுவார்கள். தொடக்கத்தில் இவர்கள் அவர்கள் காதலிப்பவர்களுக்காக அவர்களின் தவறுகளை பெருந்தன்மையோடு மன்னிப்பார்கள். ஆனால், ஒருகட்டத்தில் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்போது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

துலாம்..

போன வாரம் கூட நல்லா போய்க்கொண்டிருந்த காதல் திடீரென பிரேக் அப் ஆவது இவர்கள் விசயத்தில் தான். இவர்கள் பெரும்பாலும் அதீத கற்பனையில் வாழ்பவர்கள். அதனால் நிஜ வாழ்வு அதனோடு பொருந்தாவிட்டால் கூட காதலை பிரேக் அப் செய்து விடுகின்றனர்.

மிதுனம்..

பொதுவாகவே இவர்களுக்கு அறிவு அதிகம் இருக்கும் நட்பு வட்டம் உண்டு. அது தான் இவர்களது பிரச்னையே! அதனாலேயே காதலில் ஏதும் சிக்கல் ஏற்படும்போது காதலே முட்டாள் தனம் என நினைத்துக் கொள்வார்கள். இதனால் இவர்களை காதலிப்பவர்களும் உஷாராக இருக்க வேண்டும்.