காதலியை கழட்டிவிட்ட மகன்: கைகொடுத்து வாழ வைத்த தந்தை… சொத்தையே எழுதிவைத்து நெகிழ வைத்த சம்பவம்..!

தான் பெற்ற மகன் காதலித்த ஒரு பெண்ணை கைவிட, அவளுக்கு வேறு ஒரு மணமகனைப் பார்த்து திருமணம் செய்துவைத்த தந்தை அந்த பெண்ணுக்கு தன் சொத்துக்களையும் எழுதிக்கொடுத்து ஆனந்த கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளார்.

கேரளத்தின் திருநக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மகன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் டூ படித்தபோது ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டார். அப்போதே வீட்டை விட்டும், இருவரும் ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸாரும் தலைமறைவான அந்த பள்ளிக் காதல் ஜோடியை பிடித்து வந்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர், வீட்டை விட்டு ஓடிப்போய் எங்களை அசிங்கப்படுத்திய இவள் இனி எங்கள் பெண்ணே இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டனர்.

ஷாஜி ஒரு கனம் அதிர்ந்தார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணை என் மகள் போல் வீட்டில் வளர்க்கிறேன். இருவரும் மேற்படுப்பு படித்து, என் மகன் வேலைக்கு சென்றதும் திருமணம் செய்து வைக்கிறேன் என தன்னோடே அழைத்துப் போனார். வளைகுடா நாட்டில் வேலை செய்த ஷாஜி தன் மகனை வேலைக்காக அங்கு அழைத்துப் போனார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷாஜியின் மகன் இன்னொரு பெண் மீது காதல் வயப்பட்டு அவளை திருமணமும் செய்து கொண்டார்.

இது சாஜிக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மகனது உறவையே முற்றாகத் துண்டித்தவர், தான் மகள் போலவே வளர்த்த தன் மகனின் முதல் காதலிக்கு , வேறு ஒரு மணமகனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். கூடவே தன் மொத்த சொத்தையும் அந்த பெண்ணின் பெயரிலும் எழுதி வைத்திருக்கிறார் இந்த பாசக்கார தந்தை…அடடே என்ன ஒரு விந்தை?

You may have missed