நாய்க்கு சிலை வைத்து வணங்கும் முதியவர்.. பாசமிகு காரணம் என்ன தெரியுமா..?

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளை போல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பல வீடுகளில் நாய்கள் மிகவும் நன்றிப்பெருக்கோடு இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்படி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிரமாண குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் ஆசை, ஆசையாக நாய் ஒன்றை வளர்த்துவந்தார்.

அந்த முதியவருக்கு இப்போது 80 வயது ஆகிறது. அவர் சமூகநலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டில் வளர்த்துவந்த நாய்க்கு ஸ்யாம் குமார் என பெயர் வைத்தார். அந்த நாயானது, அவர் மீது மிகுந்த பாசம் கொண்டு இருந்தது. இந்நிலையில் 11 வருடங்களாக அவர் பாசமாக வளர்த்த அந்த நாய் திடீரென உயிர் இழந்தது. இதனால் விரக்தியில் ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டிய முத்து தான் ஆசையாக வளர்த்த நாய்க்கு சிலையும் வடித்து, சாமியாக கும்பிடுகிறார். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த நாய்க்கு பூஜைகளும் நடக்கிறது.

பயபக்தியோடு பெரியவர் முத்து தான் பாசமாக வளர்த்த நாயை வழிபட்டு வருகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed