அது குகை அல்ல.. பணக்குழி.. மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து பேசிய இயக்குனர்.. வெளியான சுவாரசியமான தகவல்கள்..!

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாள சினிமாவில் உருவாகிய படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படத்தில் இதுவும் ஓன்று. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவேய அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் எந்த படமும் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் அந்த இடத்தினை மஞ்சுமெல் பாய்ஸ் படம் பூர்த்தி செய்தது.

இந்த படத்தில் நடிகர் சவுகின் சாகிர், ஸ்ரீநாத் பாசி போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். கொடைக்கானல் குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கேரளாவை விட தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் 240 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் இந்த படத்தினை குறித்து இந்த படத்தின் இயக்குனர் சில தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது மலையாள சினிமாவில் இருந்து ஒரு வருடத்திற்கு பல படங்கள் வெளியாகின்றன. இதில் எந்த மந்திரமும் கிடையாது எனவும். மேலும்  கொடைக்கானல் குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. அது குகை அல்ல, பணக்குழி. எனவும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதி குகைக்கு தான் செலவாகியது எனவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.