இயற்கை தந்ததை இயற்கையே எடுத்து சென்று விட்டது.. வெள்ளத்தில் அடித்து சென்ற BMW கார் குறித்து பேசிய நடிகர் மிர்ச்சி சிவா..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு, காமெடி மூலமாக முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவர் டயலாக் ரைட்டர் ஆகவும் இருந்துள்ளார். மேலும் இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ  ஆர் ஜே வாக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் வருடத்திற்கு ஒரு படம் ரிதியாக நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் காசே தான் கடவுளடா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவருடைய நடிப்பு மற்றும் எதார்த்தனமான பேச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இவர் தற்போது பார்ட்டி படம், சூத்து கவ்வும் 2, நாடும் நாட்டு மக்களும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்த பொது பேசிய சிவா. அவர் வைத்திருந்த BMW கார்  பற்றி பேசியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் தான் இந்த காரை வாங்க சொன்னாராம்.மேலும் எந்த கடைல வாங்க வேண்டும் என்றும் அவர் தான் சொன்னாராம். உங்களுக்கு தகுதியான கார் என்றும் கூறியுள்ளார். 

மேலும் நான்  BMW கார் வைத்திருந்தேன். வெள்ளம் வந்த போது வெள்ளத்தில் BMW கார் அடித்து செல்லப்பட்டது. அப்போது நான் சிரிச்சி கிட்டு இருந்தேன். இயற்கை தந்ததை இயற்கையே எடுத்து சென்று விட்டது. லாஸ் எதுவும் இல்லை.நடித்து சம்பாதித்து வாங்குனது தானே  என்று எதார்த்தமாக பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்  பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.