என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.. ஜெய் பீம்.. சலசலப்பிற்கு பின் கானா பாடகி இசைவாணியின் நன்றி பதிவு..!

கானா பாடகி இசைவாணி பாடிய ஒரு பாடல் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியால் பாடிய கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் ஓன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஐயப்பன் மற்றும் அவருடைய வழிபாடுகள் குறித்து நெகட்டீவான கருத்துக்களை அவர் கூறியதாக தமிழநாடு மற்றும் கேரளாவில் விவாதங்கள் ஏற்பட்டது.

அவர் பாடிய பாடலில் ஐயப்ப பக்தர்கள் கையாளும் விரதங்கள் குறித்தும் அவர்கள் மேற்கொள்ளும் வழிபாடுகள் குறித்தும் விமர்சையாக பாடியுள்ளார் என்று குற்றசாட்டு எழுந்தது. மேலும் இவர் பாடிய இந்த பாடல் பெருமளவில் சர்ச்சைக்கு உள்ளது . மேலும் நீலம் பண்பாட்டு மையத்தின் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. இந்து மதம் சார்பாகவும் ஐயப்ப பக்கதர்கள் சார்பாகவும் இந்து மதத்தையும் ஐயப்ப பக்தர்களை புண் படுத்தியதாகவும் இசைவானி மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இசைவாணி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் இக்கட்டான சூழலை எதிர்த்து நின்று என் மீது நம்பிக்கை வைத்து உதவி கரம் நீட்டிய தோழமை உள்ளம் கொண்ட   அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஜெய் பீம். என்று பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed