தத்துவம் இல்லாத தலைவர்கள்.. விடுதலை 2 ட்ரைலர் குறித்து ஆடுகளம் கிஷோர் கூறியது.. வெளியான தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், இளவரசு, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் தான் விடுதலை 2. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாகம் 2 உருவாகி உள்ளது.இயக்குனர் வெற்றி மாறன் படம் என்றாலே அதில் வாக்குவாதத்திற்க்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் தற்போது விடுதலை 2 படத்தில் உள்ள ஒரு வசனம் சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாகி உள்ளது.  

அதாவது  தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. நல்ல சமுதாயத்தை அல்ல. அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது. என்று கூறப்பட்டுள்ளது.இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் சமீபத்தில் அரசியலுக்கு வந்தது விஜய் தான் அவரை குறித்து தான் இந்த வசனம் வந்துள்ளது எனவும் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் ஆடுகளம் பட நடிகர் கிஷோர் ஒரு பேட்டியில் இது பற்றி கூறியுள்ளார்.

அதில் தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க என்று விடுதலை 2 ட்ரைலர் வசனம் விஜயை குறித்து அல்ல. மேலும் இது எல்லாமே கம்யூனிசம் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் சாரை குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed