இந்த 5 ராசியிலும் வரன் வந்தால் உங்க வாழ்க்கை இன்னும் இருமடங்காக அழகாகுமாம்..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் பெற்றோர் என்ன தான் சொந்த,பந்தங்களைப் பார்த்து நமக்கு திருமணம் செய்துவைத்தாலும் ராசிப் பொருத்தமும் பார்க்கிறார்கள். அதில் இந்த 5 ராசியும் தரம் வந்தால் மிஸ் செய்யவே கூடாது. அதிலும் சிம்மம் என்றால் டபுள் ஒகே சொல்லிவிடுங்கள்.

இதோ அந்த டீட்டெயில்..

சிம்மம்

இவர்கள் அச்சமற்ற தன்மை, நம்பிக்கையான பார்வைக்கு புகழ்பெற்றவர்கள்.அழகான உடை, செல்லும் இடம் என அனைத்தையும் திட்டமிட்டே செய்யும் இவர்கள் காதலைச் சொல்வதையும் ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களை மணம் முடிப்பதே குடுப்பினைதான்.

தங்கள் வாழ்க்கைத்துணைக்கு சரிக்கு சமமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களை மனமுடிப்போர் எப்போதுமே சுயமரியாதையோடு பீல் செய்வார்கள்.

ரிஷபம்

இவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.இவர்களை நம்பியோரிடம் உறவை வளர்த்துக்கொள்ள மேலும் நெருக்கமாவார்கள்.

துலாம்

இவர்கள் தனிமையை விரும்புவதில்லை. காதலர்களுடன் வெளியே செல்லவும் தயங்குவதில்லை. தங்கள் வாழ்வின் முக்கிய முடிவை எடுக்கும்போதும் காதலரின், இணையின் உதவியையும் நாடுவார்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.

மிதுனம்

புதிய உறவுகளை உருவாக்குவதையும், உற்சாகமாக பொழுது போக்கவும் இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் காதலிப்பதே ஏதோ மலையோரப்பகுதிக்கு சென்ற அனுபவம் போல் சுவாரஸ்யமாக இருக்கும்.

தனுசு

வெளிப்படையாக பேசும் இவர்கள் காதலில் பல புதிய பரிணாமங்களை முயற்சித்துப் பார்ப்பார்கள். அடிப்படையில் பிடிவாதகுணம் கொண்ட இவர்கள் டேட்டிங் செல்வதில் ஆர்வம் கொண்டவர்கள். புதியவர்களிடமும் அன்பாகப் பழகுவார்கள்.