அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

தமிழ்த்திரையுலகில் நடிகர், இயக்குனர் என வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. தளபதி விஜயை வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி என இவர் எடுத்த படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதேபோல் சிம்ரனோடு சேர்ந்து இவர் நடித்த நியூ படமும் பெரிய ஹிட் ஆனது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அன்பே ஆருயிரே. இதில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிலா. இவரது நிஜப்பெயர் மீரா சோப்ரா. இவர் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, பரினித் சோப்ரா ஆகியோருக்கும் உறவினர். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கில் மட்டும் நடித்துவந்த நிலா, 2014 ஆம் ஆண்டுக்குப் பின் மும்பையில் குடியேறினார். இவர் 5 பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நிலா மாடலிங்காக இருந்து சினிமாத்துறைக்கு வந்தவர். அன்பே ஆருயிரேவுக்குப் பின்பு தமிழில் காளை, இசை, ஜாம்பவா, கில்லாடி படங்களிலும் நடித்துள்ளார். முன்பை விட இப்போது நச்சென இருக்கும் தன் புகைப்படங்களை நடிகை நிலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே அன்பே ஆருயிரே பட நாயகியா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

pic3

You may have missed