இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…

இன்று பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று இடுப்பு வலி. கர்ப்பிணி பெண்ணுக்கு வரும் இடுப்பு வலி. சுகப்பிரசவத்தில் முடியும். அதே நேரம் சாதாரணமாகவே தொடரும் இடுப்புவலியோ படுத்தி எடுத்துவிடும். இதில் இருந்து எப்படி மீள்வது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கொள்ளு மிகச்சிறந்த இயற்கை உணவுப்பொருள். கிராமப்பகுதிகளில் இதை பலரும் விரும்பிச் சாப்பிடுவது வழக்கம். கொள்ளு ரசம் வைத்து குடித்தால் இடுப்புவலி பறந்துபோகும். உடல் பருமனுக்கும் கொள்ளு நல்ல உணவு. ஆம் உடல் பருமனைக் குறைக்க வாரத்துக்கு மூன்றுநாள்கள் கொள்ளு உணவைச் சாப்பிட்டாலே போதும்.

சரி இனி இடுப்பு வலி, முதுகுவலியை தடுக்கும் மருந்து தயாரிப்பு குறித்து பார்ப்போம். ‘’அரை டம்ளர் தண்னீரில் ஒரு கரண்டி ஓமம், 100 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அது நன்கு கொதித்ததும் வடிகட்ட வேண்டும். தொடர்ந்து அதில் கற்பூரத்தை பொடி செய்து போட்டு இளஞ்சூட்டில் வலிக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். இதேபோல் முருங்கைப்பட்டை, சுக்கு இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து பூசினாலும் வலி போகும்.

இதேபோல் சாதம் வடித்த கஞ்சியை ஆறவைட்ர்ஹ்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தாலும் இடுப்புவலி போகும். பச்சை கற்பூரத்துடன் புதினா இலை சாறைக் கலந்தும் தடவலா,.

வரும் முன்னர் காப்பது அனைத்தைவிடவும் சிறந்தது. அந்தவகையில் இடுப்பு வலி வராமல் தடுக்க, உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக அளவு எடையை தூக்கக் கூடாது. டூவீலரில் வெகுதூர பயணத்தை அவாய்ட் செய்ய வேண்டும். அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த உணவுகளை குறைத்தாலே இடுப்புவலியை குறைத்து விடலாம்.

இடுப்பு வலியை தவிர்க்க குப்புறப்படுப்பதை நிறுத்த வேண்டும். நீண்டநேரம் கம்யூட்டரில் இருந்து பணி செய்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது கொஞ்சம் நடந்துவிட்டு மறுபடி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதாலும் இடுப்புவலி வரும். இவர்கள் அவ்வப்போது அமர்தல் நல்லது. தேங்காய் நார் மெத்தையில் படுப்பது நல்லது. நடைபயிற்சி செய்வது இடுப்பு வலியை காலப்போக்கில் போக்கும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு முதுகுவலி வரும். மலம் தேங்காமல் மெயிண்டையின் செய்தால் இடுப்பு வலி, முதுகுவலி ஆகியவற்றை ஊதித்தள்ளி விடலாம்.

You may have missed