மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…

குழந்தைகளின் உலகம் ரொம்பவே குதூகலமானது. அதிலும் அவர்களுக்கு திடீர் என ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்கள். அப்படியே மெய்சிலிர்த்துப் போவார்கள். இங்கே அப்படியான ஒரு விசயம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆட்டோ டிரைவரான தன் தந்தையிடம் வெகுகாலமாகவே ஒரு சைக்கிள் வாங்கி கேட்டிருக்கிறார் குட்டி தேவதை. அப்பாவும் காசு சேர்த்து வாங்கித் தருகிறேன் என சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பா, தன் மகளுக்காக சிறுக, சிறுக சேர்த்தப்பணம் ஒரு கட்டத்தில் சைக்கிள் வாங்கும் அளவுக்கு சேர்ந்தது. உடனே சவாரி முடிந்து வீட்டுக்கு வரும்போது தன் செல்ல மகளுக்கு சைக்கிள் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும், குழந்தையின் கண்ணை பொத்திக்கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தார் தந்தை.

சைக்கிளைப் பார்த்ததும் அந்த குழந்தையின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கவேண்டுமே? கூடவே தன் ஆசை அப்பாவை கட்டிப்பிடித்து நச்சென ஒரு முத்தமும் கொடுக்கிறாள் இந்த சுட்டிதேவதை. இதோ நீங்களே பாருங்களேன்.