முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..

சிலருக்கு ராசிபலனில் நம்பிக்கை இருக்கலாம். சிலருக்கு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் முதலாளி ஆவதற்கென்றும், மற்றவர்களை வேலைக்கு வைத்து வழிநடத்துவதற்கென்றும் சில ராசிகள் இருக்கிறது. அவர்களுக்கு இயல்பாகவே அந்த யோகம் கூடிவரும். அந்த லிஸ்டில் உங்கள் ராசி இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கும்பம்

இவர்களுக்கு இயல்பிலேயே படைப்பாற்றல் அதிகம். ஊழியர்கள் சொல்லும் ஆக்கப்பூர்வ யோசனைகளுக்கும் செவிமடுக்கும் தலைமைப்பண்பு இவர்களது பலம். இயல்பிலேயே இவர்களுக்கு நகைச்சுவைத்திறனும் அதிகம்.

மகரம்

இவர்கள் தலைமைத்துவத்துக்கே பிறந்தவர்கள். இவர்கள் தலைமை வகிக்கும் இடத்தில் பாலிடிக்ஸே இருக்காது. பகுத்தறிவு இவர்களுக்கு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

தனுசு..

கொஞ்சம் வேடிக்கையாகவே இவர்களின் செயல்பாடுகள் அமையும். வழக்கமாகவே கொஞ்சம் அழகான யோசனைகளை முன்வைப்பார்கள். அதன்மூலம் அவர்களிடம் இருக்கும் தொழிலாளிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி..

தங்கள் பணியாளர்கள் யார் பெஸ்ட் என யூகித்து அவர்களை வெளி உலகுக்கு காட்டுவார்கள். சுற்றியிருப்பவர்களின் கனவு, லட்சியத்தை அடைவதிலும் இவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

சிம்மம்

இவர்கள் இயல்பாகவே ஆதிக்கம் செலுத்தும் திறன் உடையவர்கள். இவர்களுக்கு பிறவியிலேயே தலைமைத்துவம் இருக்கும். இவர்கள் எதற்கும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள். இதனால் சிலரது பார்வைக்கு அகங்காரம் மிக்கவர்களாகவும் இவர்கள் தோன்றக்கூடும். மற்றவர்கள் இவர்கள் எளிதில் அணுகக் கூடியவர்கள்.

மேஷம்

இவர்களுக்கும் இயல்பிலேயே தலைமைப்பண்பு அதிகம். ஊழியர்களை திறம்பட வழிநடத்துவார்கள். செயல்களின் மூலம் இவர்களது செயல்பாடுகள் அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும்.