தன் கடைசி நாளிலும் சமைத்து வைத்த அம்மா… ருசி பார்க்காத மகன்.. வாழ்க்கை பாடம் சொல்லும் உருக்கமான பதிவு..!
வாழ்க்கை ஓட்டத்தில் இன்றைக்கெல்லாம் பெற்றவர்களோடு இருக்கும் பிள்ளைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். வாழ்க்கை ஓட்டத்தில் அவர்கள் தாய், தந்தையர் ஆன பின்பு, தங்களை ஊட்டி, வளர்த்த பெற்றோரையே எங்கோ வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகளைப் பார்ப்பது போல் தான் பார்க்க வருகின்றனர். நீங்கள் அப்படிப்பட்டவர்களாக இருந்தால் இதை தொடர்ந்து படியுங்கள். வாழ்க்கை இவ்வளவு தான் பாஸ்!
ஒரு அன்புத்தாய் தன் பாச மகனை மிகவும் கவனமாகவும், அன்புகாட்டியும் வளர்த்தாள். இளவயதிலேயே கணவனை இழந்த இளம் விதவையான அந்த பெண், தந்தை இல்லை என்ற ஏக்கம் தன் மகனின் மேல் படாமல் வளர்த்தார். ஒருகட்டத்தில் பையனும் நன்றாக வளர்ந்து, படித்து நல்ல வேலைக்கு போனான். என்ன உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை. வெளியூரில் வேலை நிமித்தம் இருந்த மகன், வாரம் ஒருமுறை தாயைப் பார்க்க வீட்டுக்கு ஓடி வந்து விடுவான்.
திருமணமெல்லாம் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ஒருகட்டத்தில் மகன் அடிக்கடி தாயைப் பார்க்க வருவது குறைந்துபோனது. ஆனால் அதையும் கூட அவனது தாய் குறையாக நினைவிக்கவில்லை. ஆனால் அவன் அதையே சாதகமாக்கி, வேலைப்பளு இருக்கும் காலங்களில் தனக்கு தாய் இருப்பதையே மறந்து போனான். ஒருநாள் தன் தாயை அழைத்தவன் இந்த அன்னையர் தினத்தில் வீட்டுக்கு வருகிறேன் என சொல்ல, உற்சாகமானாள் அவன் தாய்.
சாம்பார், பருப்பு, ரசம், மோர், அவியல், கேரட் துவரம், பாயாசம் என தன் வயோதிகத்திலும் பம்பரமாய் சுழன்று வைத்தாள். அத்தனையையும் டைனிங் டேபிளில் அடுக்கிய தாய், மகன் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பாத்ரூமில் குளிக்கப் போனவர் மாரடைப்பு வந்து உயிர் இழந்துவிட்டார். ஓரிரு நாள்கள் கழிந்தது. நான்காம் நாள் அண்டை வீடுகளுக்கு துர்நாற்றம் வீச போலீசுக்கு புகார் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்த போது அந்த தாய் மாரடைப்பால் மரணித்துப் போனதும், அவர் உடலை பூச்சி, புழுக்கள் வேட்டையாடிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.
உடனே அந்த வீட்டில் இருந்த டைரியில் இருந்து மகனின் எண்ணுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னார்கள் போலீஸ்காரர்கள். அய்யோ, வேலைப் பளுவில் அன்று சாப்பிட வரவில்லை. அம்மாவிடமும் அதன் பின்பு பேசவில்லையே…இப்படி ஆகிடுச்சேன்..”என உடைந்து அழுதார் அந்த மகன்.
வாழ்க்கை இவ்வளவு தான் பாஸ்…பெற்றோர்கள் நல்ல இருக்கும் போதே நல்லா வைச்சுக்கோங்க. அப்புறம் அழுதாலும், புலம்பினாலும் எந்த பிரயோஜனமும் இல்ல.