புது அவதாரம் எடுத்த இசையமைப்பாளர்… பிரபல ஹீரோக்களுக்கே டப் கொடுத்து மாஸாக டான்ஸ் ஆடி அசத்திய இமான்..

இசையமைப்பாளர்கள் அவர்களது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளனர். குத்து பாடல்கள், மெலடி பாடல்கள், சோக பாடல்கள் என்று ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த இசைஅமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பதோடு அதற்கான பிளே லிஸ்ட் வைத்திருப்பார்கள், பிடித்த பாடல்களை அன்றாடம் கேட்டு ரசிப்பது அவர்களின் வழக்கமாக இருக்கும்.

2கே-கிட்ஸ்களுக்கு பிடித்த இசைஅமைப்பாளர்களாக ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், டி.இமான் , யுவன், ஜி.வி.பிரகாஷ், தேவி ஸ்ரீ பிரசாத், சந்தோஷ் நாராயணன், தமன் போன்ற இசைமைப்பாளர்கள் தற்கால தலைமுறையினர் விரும்பும் இசைஅமைப்பாளர்கள் ஆகும். அதிலும் அவர்களுக்கு பிடித்த கதாநாயகர்களின் படங்கள் புதிதாக வரும் போது அதில் இடம்பெற்றுள்ள பாடல்களை விரும்பி கேட்டு அதை சமூக ஊடகங்களில் வைரல் ஆக்குவதும் ரசிகர்கள்.

டி.இமான் அவர்கள் அஜித் நடித்த விசுவாசம் படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2002-ல் தளபதி விஜய் மற்றும் கதநாயகி உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தமிழன் படத்திற்கு இசைஅமைத்திருந்தார்.இம்மானுவேல் வசந்த் தினகரன் என்ற டி.இமான் 15 வயதில் இசை துறையில் அடி எடுத்து வைத்தார். தற்போது வரை 100 படங்களுக்கு மேலாக தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி போன்ற திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவருடைய படைப்பாற்றலுக்காக் தென்னிந்திய பிலிம்பேர் விருது, தமிழ்நாடு பிலிம்பேர் விருது, விஜய் விருதுகள் , எடிசன் விருது, ஆனந்த விகடன் விருது,ஜி தமிழ் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காராக திகழ்கிறார். மேலும் இவர் பெரியத்திரை துறைக்கு அடி எடுத்து வைப்பதற்கு முன்பு சின்ன திரை தொடர்களுக்கும் இசைமைத்திருக்கிறார் அதில் கோலங்கள்,போலீஸ் டைரி மற்றும் மந்திர வாசல் போன்றவை.

படி படியாக தன்னுடைய திறமையை நிருபித்து பெரிய திரையில் தனெக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள டி.இமான் அவர்கள் தற்போது நடிகராகவும் களம் காண வருகிறாரோ என்றும், பாடல் பாடி ராக் ஸ்டாலாக பெர்பாம் செய்ததை ரசிகர்கள் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு அபார திறமையா என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அந்த காணொலியை இங்கே காணலாம்…..