பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் பகத் பாசில்.. ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார் தெரியுமா..!

தமிழ் சினிமாவில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகர் பகத் பாசில். அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் இறுதியாக சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் இவர் மலையாள நடிகர் என்பதால் இவரை மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று தான் ரசிகர்கள் சொல்லுகிறார்கள். மேலும் இவர் ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இவர் தெலுங்கில் தற்போது வெளிவந்த புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். மேலும் இவர் நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக வெளிவந்த ஆவேசம் என்ற படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் இவர் பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரும் ஆவார். சினிமாவில் இவரை வைத்து படம் எடுப்பதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்தன. மேலும் தற்போது பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார் நடிகர் பகத் பாசில் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லார் மேலும் இவருக்கு ஜோடியாக அனிமல் பட நாயகி திரிப்தி டிம்ரி நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.