குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக சூப்பர் சிங்கரில் பாட வந்த விஷ்ணு.. உதவி கரம் நீட்டிய டி.இமான்..!
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றானது சூப்பர் சிங்கர் ஜூனியர் . இந்த நிகழ்ச்சியினை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கென்று பெருமளவு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 வரை முடிந்த நிலையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை ம.க.ப.ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் நீதிபதிகளாக இசையமைப்பாளர் டி.இமான் பாடகர்கள் சித்ராமற்றும் மனோ கலந்து உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக .புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுகுளாம்பட்டி கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த விஷ்ணு கலந்து கொண்டார். மேலும் இவர் பாட்டு பாடிய முதல் பாடலிலே அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். மேலும் இவரது அம்மா அப்பா தினசரி 200 ரூபாய் கூலி வேலைக்கு போகுறவர்கள். மேலும் இவரது வீட்டில் ஒரு டிவி கூட இல்லை.
இந்நிலையில் இவரின் ஏழ்மையை அறிந்து இசையமைப்பாளர் டி.இமான் இவருக்கு கீபோர்டு வழங்கினார். மேலும் ஆனந்த் டிவி கொடுத்துள்ளார். பிரியங்கா கேஸ் அடுப்பு கொடுத்துள்ளார். பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா இவரின் படிப்புக்கான அனைத்து செலவுகளையும் செய்வதாக கூறி உள்ளனர். அது மட்டும் அல்லாமல் அவருடைய ஊரில் தண்ணீர் வசதி கிடையாதாம். உப்பு தண்ணீர் தான் உண்டாம். அதனை பார்ப்பதற்க்காக் சூப்பர் சிங்கர் குழு அவருடைய ஊருக்கு சென்று தண்ணீர் வசதி இல்லாததை விசாரித்து வந்துள்ளனர். அவர்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.