இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா மகன்களை பார்த்துள்ளீர்களா… எவ்ளோ வளந்துட்டாங்க பாருங்க…!

நடன புயல், இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று மக்களால் புகழப்படும் பிரபு தேவா அவர்கள் தந்தையும் நடன இயக்குனர் ஆவார்.இவரது தந்தை பிரபல நடன இயக்குனர் சுந்தர். பிரபு தேவா அவரின் இளையமகன் ஆவார். நடன புயல் பிரபு தேவாவிற்கு ஒரு அண்ணன் ராஜ சுந்தரமும், ஒரு தம்பி நாகேந்திர பிரசாத். இவர்கள் அனைவரும் நடனம் மற்றும் சினிமாவில் கோலோச்சி வருகிறார்கள்.

பிரபு தேவா அவர்கள் முதன் முதலில் உலக நாயகன் படமான வெற்றி விழா படத்தில் நடன இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.1994-ல், இயக்குனர் சங்கரின் இரண்டாம் படமான காதலன் படத்தில் கதநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன. இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ட்ரென்டிங்க் ஆனது. மேலும் இந்த படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட்டது. டோலி வுட் மற்றும் பாலி வுட்டிலும் படம் நன்றாக ஓடியது. இதன் மூலம் அவர் பாலி வுட்டிலும் அவரது புகழ் பரவியது. இந்நிலையில் 2007-ல் நடிகர் விஜய் கதநாயகனாக நடிகை அசின் கதாநாயகியாக நடித்த போக்கிரி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

போக்கிரி வெற்றி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் வைத்து படம் இயக்கியுள்ளார். இவருக்கு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

1995 ரமலத் என்ற லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் முதல் மகன் 2008-ல் புற்று நோயால் இறந்துள்ளார். இந்த தம்பதிகள் 2011-ல் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளனர். பின்னர் 2020-ல் மும்பையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. அவரை போலவே தோற்றத்தில் இருப்பதாக நெட்டிஸன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

pic1

pic2

You may have missed