90-கிட்ஸ்களின் மறக்க முடியாத நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்.. இப்போதும் கொண்டாடும் 90ஸ்கள்… எப்படி இந்த மனுஷன் ஆடியிருக்கிறார்னு பாருங்க…!

தோட்டு கடை ஓரத்திலே……என்று தொடங்கும் கிராமிய தெம்மாங்கு பாடல் இப்போதும் கொண்டாடும் பாடலாக இருக்கிறது. இந்த பாடலை பாடியவர் விஜலெட்சுமி நவநீத கிருஷ்ணன் , இவர் 80-பதுகளின் இறுதியில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் DD, பொதிகை தொலைக்காட்சியில் வைரல் ஆன பாடல் ஆகும். 90-ஸ் பள்ளிகள் ஆண்டு விழாவில் நிச்சயம் இந்த பாடலுக்கு மாணவ மாணவிகள் நடனம் ஆடுவது வழக்கம். சுற்றுலா செல்லும் பள்ளிகள் வாகனங்களில் இந்த பாடலை ஒலிக்க விட்டு நடனம் ஆடி மகிழ்வார்கள். இன்றும் இளமை குறையாமல் இருக்கும் கிராமிய தெம்மாங்கு பாடல் இது.

திருமதி.விஜலட்சுமி நவநீத கிருஷ்ணன் காமராஜ் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய பிரிவில் HODயாக பணிபுரிந்துள்ளார். இவரும் இவரது கணவர் திரு.நவநீத கிருஷ்ணன் அவர்களும் பாடகர்கள், இசைஅமைப்பாளர்கள், இவர்கள் தமிழ் இலக்கியம், மற்றும் நாட்டுப்புற பாடல் பிரிவில் ஆராய்சி செய்து டாக்ட்ரேட் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ் மொழி மற்றும் அதன் நாட்டுப்புற பாடல்கள் மேல் உள்ள பற்றால் அவற்றை ஆராய்ச்சி செய்து பல புத்தகங்கள் படைத்துள்ளனர். இதற்காக அவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருந்து 2018-ல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற தெம்மாங்கு பாடலை இவர்களே இசையமைத்து, பாடல்பாடி நடனத்தோடு வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான படைப்பை பொதிகை தொலைக்காட்சியில் காணலாம். இந்த பாட்டிற்கு ஒருவர் அதற்கு ஏற்றாற் போல் நடனம் ஆடி இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த நடன காட்சிகள் இதோ..

You may have missed