பிராங்க்ணா இப்படி பண்ணுங்கப்பா.. ஏழைங்க வயிறாவது நிறையும்… பலரின் நெஞ்சை தொடும் காணொளி..!

இன்று பிராங் ஷோ என்னும் பெயரில் பலரும் அபத்தமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி என்ன செய்கிறார்கள் என்கிறீர்களா? சாமானிய ஏழை எளிய ஆட்டோக்காரர்கள், சாலையோர வாசிகள் என பாவப்பட்ட மக்களை வைத்தே பிராங் ஷோ நடத்துகின்றனர்.

ஆனால் இந்த பிராஷ் ஷோ வாலிபர்களுக்கு எல்லாம் அறிவுரை சொல்லுவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி, என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? இங்கே ஒரு அப்பாவும், மகனும் சொந்தமாக வீடு கூட இல்லாமல் தாங்கள் தொழில் செய்யும் தள்ளுவண்டியிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்த ஒரு இளைஞர் அவர்களுக்குப் பக்கத்தில் நல்ல உயர் ரக சாப்பாடுகளையும், குளிர்பானங்களையும் வைத்துவிட்டு சொல்லிக் கொள்ளாமல் மறைந்து போகிறார்.

தூங்கி முழித்ததும் இதைப் பார்த்த அப்பாவும், மகனும் தங்களுக்கு இதைக் கடவுளே கொடுத்ததாக நினைத்து வானை நோக்கி வணங்கிவிட்டு சாப்பிடத் துவங்குகின்றனர். இதற்கு மேல் இந்த உலகில் பெரிய விசயம் என என்ன இருக்க முடியும்? பிராங் என்னும் பெயரில் கேனைத்தனமாக ஏதாவது செய்து வீடியோ எடுப்பவர்கள் ஏழைகளின் பசியையேனும் போக்கலாம் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.