இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் பிரச்சனையா.. மனம் திறந்து வெளிப்படையாக பேசிய புஷ்பா 2 தயாரிப்பாளர் ரவிசங்கர்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் புஷ்பா 2. இந்த படத்தில்  நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து கொண்டுவருகிறது. சமீபத்தில்  சென்னையில் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ லான்ச்  நடைபெற்றது. அதில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளர் ரவியை குறித்து ரவி சார் நான் எதோ டைம்க்கு வரல, டைம்க்கு பாட்டு தரல அப்படிலாம் சொல்லி உங்களுக்கு என் மேல அன்பு இருக்குறத விட அதிகளவில் கம்பளைண்ட் தான் உள்ளது. அப்டினே சர்ச்சையாக பேசியிருந்தார்.

தற்போது இது குறித்து தயாரிப்பாளர் ரவி ஷங்கர் பேசிகையில் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுனதில் எந்த தவறும் இல்லை. அவர் ஒரு சினிமா வசனம் போல தான் பேசியிருந்தார். எங்களுக்குள் எந்த வித பிரச்சனையும் இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாக தான் உள்ளோம். அவர் இசைத்துறையில் பயணிக்கும் வரையில் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார் என்று புஷ்பா 2 தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed