ஆசிரியரால் ஊக்குவிக்கப்பட்ட மாணவிக்கு சரிகமப வில் கிடைத்த அங்கீகாரம்.. இனிமையான குரலால் ஈர்க்கப்பட்ட நடுவர்கள்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இது பலபரின் குரல் வளத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த மேடை என கூறலாம். பொதுவாகவே பாடல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.ஒருவரின் குரல் வளம் அருமையாக இருந்தாலே அவரின் பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த வகையில் ஒரு மாணவியின் பாடலை கேட்ட ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை ஊக்குவித்து அவரை பல இடங்களில் பாட வைத்துள்ளார்.

அந்த வகையில் ஆசிரியரின் தூண்டுதலினால் அந்த மாணவிக்கு கிடைத்த மேடை தான் இது என கூறலாம். கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலை பள்ளி மாணவி யோக ஸ்ரீ. இவருடைய தந்தை டைல்ஸ் ஓட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகளுக்கு சிறுவயதில் இருந்தே பாடும் திறமை உள்ளது. இதனை பார்த்த அவரது இரண்டாம் வகுப்பு ஆசிரியை மஹேஸ்வரி அவரது சிறு வயதில் இருந்தே ஊக்குவித்து வந்துள்ளார்.

அவரின் தூண்டுதலால் இவருக்கு கிடைத்த மேடை தான் சரிகமப. இதில் அவர் பாடகி சுசீலா மற்றும் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடலை பாடி உள்ளார். பாடிய முதல் நாளே அரங்கையே அதிர வைத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் நடுவர்களையும் தன்னுடைய குரலால் தன் பக்கம் இழுத்துள்ளார்.தன்னுடைய முதல் பாடலிலே அவருக்கு பெரிதளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவரின் பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may have missed