சதுரங்க வேட்டை திரைப்பட நடிகையா இது.. திருமணம் ஆகி தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..

தமிழ்திரையுலகில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் சில படங்கள் நல்ல கதையம்சத்திற்காக பெரிய அளவில் வெற்றிபெற்றுவிடும். அப்படியான ஒரு திரைப்படம் தான் சதுரங்கவேட்டை. நட்டி என்னும் நட்ராஜ் நடித்த இந்தப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் இஷாரா நாயர். இவர் வெண்மேகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் பப்பாளி, இவன் யார் என்ற் தெரிகிறதா?, பப்பரபாம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சதுரங்க வேட்டைப் படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு அடுத்து வந்த படங்கள் எதுவுமே கைகொடுக்கவில்லை. இதனால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு கல்யாணம் செய்துகொண்டார்.

இவரது கணவர் ஷிகிலுடன் இப்போது துபாயில் வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்றும் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு, ‘எங்கிருந்து வரீங்கடா நீங்க எல்லாம்?’ என்னும் படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு ரீ எண்ட்ரி ஆகிறார் அம்மணி. இவரது குடும்பப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

pic1

pic2

pic3