கடைசி காலம் வரை துரத்தும் கொடுமை… பாட்டுக்கு ஜாலியாக ஆட்டம் போட்ட தாத்தா… கம்புடன் பாட்டி செஞ்ச வேலைய பாருங்க..

வாழ்க்கையில் சில விசயங்கள் மாறவே செய்யாது என்பார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கல்யாணம் ஆகாதவர்கள் பலரும் தனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதேநேரம், திருமணம் முடிந்தவர்களிடம் பேசினால்தான் அவர்கள் கஷ்டம் தெரியும். அதுவரை சுதந்திரப்பறவையாக இருந்த அவர்களின் வாழ்வு, அதன்பின்பு மிகவும் சிக்கலுக்குள் சிக்கிக் கொள்கிறது. இவ்வளவு ஏன் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குக் கூட மனைவியின் பெர்மிஷனுக்கு காத்திருக்கும் கணவர்கள் ஏராளம். மணிக்கு ஒருமுறை பொண்டாட்டியிடம் இருந்து போன் வரும் கணவர்களும் உண்டு. கணவரை அந்த அளவுக்கு தன் சுண்டுவிரல் அசைவில் வைத்துக்கொள்ளும் மனைவிகளும் உண்டு.

இங்கேயும் அப்படித்தான். ஒரு தாத்தா உள்ளூரில் நடந்துகொண்டிருந்த விசேச நிகழ்வ்ச்சிக்குப் போயிருந்தார். அங்கே மைக் செட், சீரியல் லைட் எல்லாம் போட்டு அந்தப்பகுதி இளைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். அதனைப் பார்த்துவிட்டு, அந்த தாத்தாவும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தாத்தா ஆடுவதைப் பார்த்துவிட்டு வந்த அவரது மனைவி, கையில் கம்பையும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்தார்.

இதைப் பார்த்த தாத்தா ஆடுவதை நிறுத்திவிட்டு ஜூட் விட்டார். எத்தனை வயதானாலும் இந்தக் கொடுமைக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா? என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.