கலைஞனை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வேதனை..!

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும். இந்த சீரியலில் ஹீரோவாக வெற்றி வசந்த் நடித்திருப்பர். அவருக்கு ஜோடியாக வருபவர் தான் நடிகை ஹோமதி பிரியா. ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் பழனியப்பன். இவர் செல்வம் என்ற பெயரில் நடித்திருப்பார்.

இவரின் யதார்த்தமான நடிப்பாழும்  நண்பனுக்கு பக்க பலமாக இருக்கும் குணத்தாலும் செல்வம்  என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு வேதனையான அனுபவத்தை கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கி உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் இவர் யார் எனவும் எந்த சீரியலில் நடித்துள்ளார் உணவு, கூறவில்லையாம் மேலும் இவரை பற்றி தொகுப்பாளர்களுக்கு கூட தெரியவில்லையாம்.

இதனால் வேதனை அடைந்த பழனியப்பன் விருது வழங்குவதற்கு முன்பு யாருக்கு விருது வழங்குகிறோம் எதற்கு வழங்குகிறோம் என்பதை தெரிந்து வைத்து விருது வழங்குகள் என கூறியிருக்கிறார். மேலும் ஒரு கலைஞனை கூப்பிட்டு இவ்வாறு அவமதிக்காதீர்கள் எனவும் சொல்லிருக்கிறார்.இது நான் எனக்காக மட்டும் போட்ட பதிவு அல்ல சக கலைஞருக்கும் போட்ட பதிவு அப்படி சொல்லி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may have missed