நீங்கள் படுக்கும் திசை சரியா? சித்தர்கள் சொன்னது இது..!

நமக்கு என்ன பாஸ், ஜிலு,ஜிலுன்னு காத்து அடிச்சா அப்படியே நீட்டி முழங்கி தூங்கிடுவோம் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தூக்கப் பிரியரா நீங்கள். இதைப் படிங்க முதல்ல…

தூங்குறதே ஒரு வரம் தான். கவலை இல்லாத மனுசன் படுத்ததும் தூங்கிருவான்னு கிராமத்துப் பக்கம் சொல்லுவாங்க. அதிலும் நம் சித்தர்கள் எந்த திசையில் படுத்தால், என்ன நடக்கும்ன்னு தெளிவா பல நூறு வருசங்களுக்கு முன்னாடியே சொல்லிருக்காங்க. அது என்னன்னு இந்த செய்தியில் பார்ப்போம் வாங்க…

தென் திசை பார்த்து பூர்த்துப் போய் பாட்டே எழுதியிருக்காரு பாரதிதாசன். அதேபோல் தெற்கே தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும், கிழக்கில் தலைவைத்துப் படுத்தால் மிகவும் நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்குப் பகுதியில் மட்டும் ஒரு நாளும் தலைவைத்து தூங்கவே கூடாது என்பது சித்தர்கள் வாக்கு.

அப்படி படுத்தா? சித்தர்களின் இந்த கருத்துக்கும், இன்றைய விஞ்ஞானத்துக்கும் கூட தொடர்பு இருக்கு. வடக்குத்திசையில் இருந்து தான் காந்த சக்தி நம்மளை நோக்கி வரும். இதனால் மூளை பலவீனம் அடையும், இதயநோய் வரும் வாய்ப்பும் உண்டாகும். நரம்புத்தளர்ச்சியும் வரும் வாய்ப்பு உண்டு. மல்லாந்து கால், கைகளை அகட்டி வைத்துப் படுப்பவர்களுக்கு உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

சரி அப்போ எப்படித்தான் படுப்பது? அதற்கும் சித்தர்களே வழிகாட்டுகிறார்கள். இடதுகை கீழாகவும், வலது கை மேலாகவும் இருக்குற மாதிரி கால்களை நீட்டி, இடதுபக்கமாக ஒருக்களிச்சு படுக்கணும் என்கிறார்கள். இதனால் என்ன ஆகும் என்கிறீர்களா? வலதுமூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதனால் நீண்ட ஆயுள் கிடைக்கும். இதயம் பலப்படும், சீரண சக்தி அதிகரிக்கும்.

பிறகென்ன காசா? பணமா நம் சித்தர்கள் சொல்வது போல் தூங்குங்கள்…நோய்களை விரட்டுங்கள்

You may have missed