நீங்கள் உட்காரும் ஸ்டைலை வைத்தே உங்கள் குணாதிசயத்தை சொல்லிவிடலாம்…
சும்மா உட்கார்ந்து இருப்பது ரொம்பவும் கஷ்டமானது. வடிவேலு ஒரு படத்தில் சும்மா உட்கார்ந்து படும் கஷ்டத்தை நாம் ரொம்பவே பார்த்திருக்கிறோம். அதை சவாலாகவும் மற்றவர்களுக்கு விடுவார். இங்கே நாம் விசயத்துக்கு வருவோம். ஒருவர் அமர்ந்திருக்கும் ஸ்டைலை வைத்தே ஒருவரின் குணத்தை சொல்லிவிட முடியும்.
முதல் நிலை..
அமர்ந்த நிலையில் இரு கால் பாதங்களும் இவர்களுக்கு ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்கும். பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டதைப் போல் நினைப்பவர்கள். அனைவரிடமும் எளிதில் பழகும் குணம் இவர்களுக்கு உண்டு.
இரண்டாம் நிலை..
கால் போல் கால் போட்டு அமரும் இவர்கள், அதிக கனவுகளைக் கொண்டவர்களாகவும், கற்பனைத் திறனில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் புதுமையாக யோசிக்கும் இவர்கள் நண்பர்கள் கூட்டத்திலும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்.
மூன்றாம் நிலை..
மூன்றாம் நிலைப்படி இருப்பவர்கள் எப்போதும் வசதியாக இருக்கவேண்டும் என விரும்புவார்கள். வார இறுதிநாள்களை மகிழ்வுடன் கழிப்பார்கள். சாதாரண செண்ட் பாட்டில் வாங்கவே ஒருநாளை செலவு செய்வார்கள்.
நான்காம் நிலை
இவர்கள் இயல்பாகவே அதீதமாக சுத்தம் பார்ப்பார்கள். இவர்களும் சுத்தமாக இருப்பார்கள். திறமை, அழகு, இளகிய மனம் ஆகியவை இவர்களது முக்கியக் குணம் ஆகும்.
ஐந்தாம் நிலை
முதலில் கல்வி, தொடர்ந்து நல்ல உத்தியோகம் என வாழ்வை லட்சியப்பாதையில் இவர்கள் நடத்துவார்கள். திருமணம் உள்ளிட்ட சிற்றின்பத்தில் இருந்து விலகி இருப்பார்கள். வாழ்வில் ஜெயித்தபின்பு தான் திருமணம் என்னும் கொள்கைப்பிடிப்பும் இவர்களுக்கு உண்டு.