உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!

நம் வாழ்வில் எப்போது அதிர்ஷ்டக் காற்று வீசும் என தெரிந்து கொள்வதில் ஒவ்வொருக்குமே அலாதி ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்காக நீங்கள் காலண்டரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார வேண்டியது இல்லை. உங்கள் பிறந்ததேதியை வைத்தே கணித்து விடலாம்.

நாம் இங்கு பிறந்ததேதி என சொல்வது நாம் பிறந்ததேதியின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகை. உதாரணமாக ஒருவர் 11ம் தேதி பிறந்தால் அவரின் பிறந்த எண் 2…

இனி இந்த வரிசையில் பார்ப்போம்…

பிறந்த எண் 1…

22வயது இவர்களின் அதிர்ஷ்ட எண். இந்த வயது இவர்களுக்கு பணம், பொருள், வெற்றியைக் குவிக்கும். இந்த வயது அவர்களின் வெற்றிக்கு பாதைக் காட்டும்.

பிறந்த எண் 2 (பிறந்ததேதி 2, 11,20)

இவர்களின் அதிர்ஷ்டவயது 24. இவர்களின் உழைப்பின் பலனை அனுபவிக்க விதை போட்ட வயது இதுதான்.

பிறந்த எண் 3 (பிறந்ததேதி 3, 21,30)

32 வயது இவர்களுக்கு அதிர்ஷ்டவயது. அதுவரை தொழிலாளியாக இருந்த இவர்கள், முதலாளியாகி நான்கு பேரிடம் வேலைவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லும் வயது இது.

பிறந்த எண்: 4 (பிறந்ததேதி 4,22,31)

இவர்களின் அதிர்ஷ்ட வயது 36, 42. பதவி உயர்வு, சமூகத்தில் மரியாதை, வெற்றி ஆகியவை கிடைக்கும் வயது இது.

பிறந்த எண் 5 (பிறந்ததேதி 5,14,23)

அதுவரை இருந்த வாழ்க்கை முறை இவர்களுக்கு 32 வயதில் மாறத்துவங்கும். வாழ்க்கை புதிய திசையை நோக்கி செல்லும், வெற்றிகளை குவிக்கத் துவங்கும் வயது இது.

பிறந்த எண் 6 (பிறந்ததேதி 6,15,24)

25 வயதில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் துவங்கும், விரும்பிய லட்சிய வேலையை இந்த வயதில் எட்டிப் பிடிப்பார்கள். அவர்கள் வாழ்வின் தொடக்கப் புள்ளியாகவும் அது அமையும்.

பிறந்த எண்: 7 (பிறந்ததேதி 7,16,25)

38, 44 வயதுகள் இவர்களின் அதிர்ஷ்ட வயது. அதில் இருந்து படிப்படியாக முன்னேறுவார்கள்.

பிறந்த எண் 8

36, 42 இவர்களின் அதிர்ஷ்ட வயது. ஆனால் அதுவரை ரொம்ப சிரமத்துக்கு உள்ளாவார்கள். முள் படுக்கை மேல் இருப்பது போல் அதுவரை நகர்ந்த வாழ்வு அதன் பின்னர் சீராகும்.

பிறந்த எண் 9 (பிறந்த தேதி 9,18,27)

இவர்களை புகழ், அதிக செல்வத்துக்கு அழைத்துச் செல்லும் வயது 28. அதன் பின்னர் இவர்கள் செல்வத்தில் திளைப்பார்கள்.

உங்க பிறந்ததேதிக்கு எப்போ அதிர்ஷ்டம் கொட்டும்ன்னு பார்த்துட்டீங்களா?

You may have missed