தினம் ராசிபலன் சொல்லும் இவரை நினைவிருக்கிறதா… தற்போது எங்கே இருக்கிறார்… என்ன செய்கிறார் தெரியுமா..?

திரைப்பட நடிகர், நடிகைகள் மட்டுமல்ல சில நிகழ்ச்சிகள் கூட சிலரை ரொம்பவே ஹிட்டாக்கி விடும். அதிலும் சன் டிவியில் வந்த பலரும் செம ஹிட் ஆகியிருக்கின்றனர். பெப்ஸி உமா தொடங்கி இதில் பெரும்பட்டியலே போடலாம். அந்த வரிசையில் ராசிபலன் சொல்லி ஹிட் ஆன தொகுப்பாளர் தான் விஜே விஷால்.

உங்க ராசிக்கு ஏற்ற திசை, உடை என அழகாக தமிழில் பேசும் விஜே விஷால் இப்போது ஐடி கம்பெனி ஒன்றில் வேலைசெய்து வருகிறார். முன்பு ஐடி கம்பெனிக்கு வேலைக்கு இடையில் தான் ராசி பலனும் சொல்லிவந்தார். இப்போது ஐடி கம்பெனி வேலை அழுத்த முழுநேர ஐடி ஊழியராகவே தொடர்கிறார்.

இதுகுறித்து அண்மையில் பேசியிருந்த விஜே விஷால், ‘ஐடி கம்பெனியில் இருந்து மூன்று வருடம் லண்டனில் தங்கி வேலை செய்ய அனுப்பினார்கள். அங்கே கிடைக்கும் நேரத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கலாம் என டெஸ்ட் சூட் போனேன். மீடியா தான் என்னை அதிகளவு பேமஸாக்கியது. ஆனால் என்னோட வளர்ச்சிக்கு ஐடிகம்பெனி தான் காரணமாக இருந்தது. அதனால்தான் ஐடி வேலையை விடக்கூடாதுன்னு முடிவுசெஞ்சேன்.

இப்போதும் வெளியில் போனால் யாராவது ஒருவரேனும் நீங்க சன்டிவியில் ராசிபலன் சொல்பவர்தானே என கேட்கிறார்கள். ’என்று சொன்னார்.

தொடர்ந்து அம்மணி ராசிபலன் சொல்ல யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். இதில் ஜோதிடத்தின் பின்னால் இருக்கும் அறிவியலையும் விளக்கிச் சொல்லிவந்தார். ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே திடீரென சேனலை மூடிவிட்டார். இப்போது விஜே விஷாலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed