நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…

இலங்கை வாழ் தமிழ் பெண்ணாக களம் கண்ட ஜனனி இலங்கை தமிழ் மீடியாவான ஐபிசி நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். கல்லூரி படித்து கொண்டிருக்கும் போதே சினிமாவால் ஈர்க்கப்பட்டு மாடர்லிங்க் துறையில் சேர்ந்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளார். திரைப்படங்களையும், 90-கிட்ஸ்களின் பாட்டுக்களையும், 2கே-கிட்ஸ்களின் பாட்டுகளையும் விமர்ச்சனம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று 2கே-கிட்ஸ்களின் பாடல்களின் தனித்துவத்தை எடுத்து விளக்குவார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர். கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார்.

ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வரை வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். குழுவாக இல்லாமல் அல்லது தனித்து விளையாடியிருந்தால் அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை வர வாய்ப்புகள் மக்களால் தரப்பட்டிருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளையவர்களான தனலெக்ஷ்மியும், ஜனனியும் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஜனனி வெளியேற்றப்பட்டார்.

ஜனனியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று மக்கள் கணித்து வந்த நிலையில் அவரது ஒரு நாளைக்கான சம்பளம் இந்திய மதிப்பில் ரூபாய் 12,000/- முதல் 30,000/-வரை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

You may have missed