50ப்ளஸ் மாமியாரை 30ப்ளஸ் அக்காவாக மாற்றிய மருமகள்… மாமியாரின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மருமகள்..!

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு ஒரு வித பயம் கலந்த பதட்டம் மணமகனின் பெற்றோர்கள் இடத்தில் ஏற்படும். தற்போது உள்ள காலகட்டங்களில் திருமணத்திற்கு முன்பே ஒரு சில நிகழ்ச்சிகளில் பேசி பழகி இருந்தாலும் அவர்கள் புகுந்த வீட்டின் உண்மை நிலை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படும் நிலை உருவாக சில காலம் எடுத்துக்கொள்ளும். மாமியார் மருமகள் உறவு என்பது இரு துருவங்கள் போல் இருக்கும், அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே முடியும். இதில் விதி விலக்காக ஒரு சில மருமகள்கள் மகள் போன்றும், மாமியார்கள் தாய் போன்றும் இருக்கும் உறவு அதிசயமாக பார்க்கப்படும்.

புதிதாக புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள் செய்யும் செயல்கள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும், எவ்வாறு சமையல் செய்கிறார், அவருடைய பண்பு, குணநலன்கள், பொறுமை , கடமை போன்ற அனைத்தும் மாமியாரால் உன்னிப்பாக கவனிக்கப்படும். இப்படி கவனிப்பவர்களும், ஒரு காலத்தில் மணமகளாக அதே வீட்டிற்கு வருகை தந்தவராக தான் இருப்பார். தன் மாமியார் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தில் சிறிதளவேனும் இவர்களும் கடைபிடிப்பார்கள். நல்ல புரிதலோடு மாமியாரை தாய் போன்றும், மணமகளை மகள் போன்றும் கருதினால் வாழ்வில் சண்டை சச்சரவுகள் இல்லாது போகும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை…..இது மாமியார் மருமகள் உறவிற்கு பொருந்தும். எதையும் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு பிடித்ததை செய்ய அவரவர்கள் வழி விட்டு காலத்திற்கு ஏற்ப நடந்து கொண்டால் பிரச்சனைகள் இருக்காது.

இங்கு ஒரு மருமகள் மாமியார் உறவு உலகமே மெச்சும் அளவு உள்ளது. கால் முட்டி வலியால் அவதி பட்டு வந்த மாமியார் எவ்வளவு மருந்துகள் உட்கொண்டும் வலி குறையவில்லை. இதனால் அவரது மருமகள் உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்ல மருமகள் உடன் தண்டால் எடுப்பது, அதிக எடை கொண்ட பளுவை தூக்குவது என உடற்பயிற்சி கூடத்தில் ஒரு சில உடற்பயிற்சிகளை மருமகளுடன் மாமியரும் செய்ய ஆரம்பித்துள்ளார், நாளைடைவில் அதிக எடை கொண்ட அவரது உடல் எடை குறைந்து பத்து வருடம் இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். கடினமாக உழைத்து மருமகளின் உத்வேகத்தால் உடல் எடை குறைந்ததுடன் கால் முட்டி வலியும் சரியாகி உள்ளது. தற்போது இருவரது கடின உழைப்பும், மாமியார் மருமகளின் நல்ல புரிதலையும் ….மாமியாருக்கு ஊக்கமளித்து உதவிய மருமகளின் உயர்ந்த எண்ணத்தையும் …..சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை கீழே காணலாம்….

You may have missed