வெளிநாட்டில் இருந்து சர்ப்ரைஸாக வந்து நின்ற அப்பா… செல்ல மகள் செய்த நெகிழவைக்கும் சம்பவம்..
வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.
அதைவிட ராணுவத்தில் இருப்பவர்களின் நிலையோ இன்னும் சிக்கலானது. வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் பதட்டத்துடனே இருப்பார்கள். அதிலும் போர் பற்றி செய்தித்தாள்களில் பார்த்தாலே பதட்டம் ஆகிவிடுவார்கள். இது அத்தனையையும் நம் தாய்நாடு என்பதற்காகவே தியாக மனப்பான்மையோடு வீரத்தோடு சகித்துக் கொள்வார்கள்.
வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது. ‘சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?’ என்னும் பாடலை கேட்டாலே வெளிநாட்டில் இருப்பவர்கள் உருகி விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் கொடூரமானது. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நடுத்தர வயதுக்காரர் ஒருவர் குவைத்தில் வேலை செய்துவருகிறார். அவருடைய உறவுக்காரர் திருமணத்திற்கு அவரை அழைத்தனர். அவரோ விடுமுறை இல்லை என வரவில்லை எனச் சொல்லிவிட்டார். தன் குடும்பத்திற்கும் அவர் இந்தியாவுக்கு வருவது பற்றிச் சொல்லவில்லை. இந்நிலையில் உறவுக்காரத் திருமணத்தில் திடீர் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்தார். அவரைப் பார்த்ததும் அனைவருமே ஆச்சர்யத்தில் சொக்கிப் போயினர். அவரைப் பார்த்த மகளோ தன்னைச் சுற்றி கூட்டம் இருப்பதையே மறந்து அப்பாவைப் பார்த்ததும் ஓடிப் போய் அவரைக் கட்டியணைத்து தன் மித மிஞ்சிய பாசத்தை வெளிப்படுத்துகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.