நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்…
ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே……என்ற பாடல் வரிகள் இந்த காட்சியை காண்பவருக்கு பொருந்தும். அன்பு என்பது வெளிப்புற தோற்றத்தை கொண்டு ஒருவருக்கு வருமானால் நிச்சயம் நீரில் உருவாகும் குமிழி போல் சீக்கிரம் மறைந்து போகும். அக தோற்றத்தை பார்த்து வருமானால் உயிர் உள்ளவரை நீடிக்கும். வெளிப்புற அழகு குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டுமே நம்முடன் வரும். அக தோற்றம் அவ்வளவு எளிதில் மறையாது. நல்ல பண்புகள் கொண்ட மனிதர்கள் அவ்வளவு எளிதில் மாறுவது இல்லை. அவர்கள் மாறுவதற்கு பதிலாக சில விளைவுகளை தவிர்ப்பார்கள்.
திருமணம் செய்து கொண்ட மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து, அன்புடன் இருவரும் இணைந்து வாழ்தலே குடும்பம். குடும்பங்கள் சிறப்பாக இருக்க கணவன் மற்றும் மனைவியின் பங்கு அளப்பரியது. சில பல பிரச்சனைகள் இருந்தாலும், சவாலாக ஏற்று கொண்டு அதை திறம்பட நிர்வகித்து சரிசெய்து வாழ்வில் முன்னேறி போவதே குடும்பத்தின் சிறம்பம்சம்.
ஷாஜகான் காதல் மனைவிக்காக தாஜ்மகால் காட்டினார். இதன் மூலம் அவர் தன்னுடைய மனைவி மும்தாஜ் மேல் எவ்வளவு அன்பு கொண்டு வாழ்ந்திருப்பார் என்பது உலகத்துக்கே தெரியும். சமீபத்தில் கூட தன்னுடன் இணை பிரியாமல் இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருந்த மனைவியின் நினைவாக கணவன் ஒருவர் இறந்து போன மனைவியை மெழுகு சிலையாக வடித்து புதிதாக கட்டிய வீட்டில் வைத்திருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. தம்முடன் வாழ்ந்த இன்னொரு பிம்பம் போல் செயல் பட்ட வாழ்கை துணையின் மேல் அதிக அன்பு வைத்திருப்பது இயற்கை தான்.
நூறு வருஷம் இந்த ஜோடி நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோடியை பார்த்தவர்கள் கூறுவார்கள். இங்கே ஒரு கணவன் நடை பாதையில் உட்கார்ந்திருக்க அவரது மனைவி அவருடைய மடியில் படுத்திருக்கிறார், மேலும் மனைவியை தட்டி கொடுத்து தூங்க வைக்கிறார். தற்போது இந்த அன்பு எல்லை தாண்டி உலகமெங்கும் வட்டம் அடித்து கொண்டு வருகிறது…. கணவன், மனைவியின் அன்பை கண்டு நெட்டிஸன்கள் அந்த தம்பதிகளை நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்……அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது…..என்ற பாச மிகு காட்சிகள் இங்கே தரப்பட்டுள்ளது.
हमसफर वही जो हर सफर में आपके साथ हो ❤️🥰 pic.twitter.com/QbyVbZi4AE
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 19, 2022