சிலந்தி வலையில் திருமணமா…. கற்பனையை நிஜமாகி காட்டிய மணமக்கள்…

திருமணங்கள் என்னவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்……அது பூலோகத்தில் தான் நடக்கும். கோவிலிலோ, தேவாலயங்களிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டில் வைத்தோ நடைபெறும். மணமக்கள் வசதிக்கேற்பவும், அவர்களின் விருப்பத்திற்கேற்பவும் இடத்தினை தேர்வு செய்து மணமுடிப்பார்கள். 2k-காலத்தில் மனிதர்களின் விருப்பம் மாறுதல் அடைந்துள்ளது, அதற்கு காரணம் நவீன தொழில்நுட்ப்பங்கள், கற்பனைக்கு எட்டாத செயலையும் செய்து காட்டும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு எதுவும் சாத்தியமே……

திருமணங்கள் தற்போது பெரிய ஹோட்டல்களிலும், அரண்மைனைகளிலும், தனியார் பண்ணைகளிலும், விளையாட்டு திடல்களிலும், கப்பல்களிலும், வானுர்திகளிலும் நடைபெறுகிறது. திருமணத்திற்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் வசதிற்கேற்ப திருமண மண்டபங்களை தேர்வு செய்கிறார்கள்.

இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற திருமண இடங்களாக முதல் ஐந்து இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன….அவை…. முதலாவதாக உதய்ப்பூர், இங்கு மிக அழகான அரண்மனை உள்ளதால் வசதிப்படைத்தவர்கள் அதிகமாக இந்த அரண்மனையில் திருமணம் நடத்துகிறார்கள். இரண்டாவதாக ஜெய்ப்பூர் இங்கு ஒரு ராஜாவுக்கும் , ராணிக்கும் திருமணம் நடத்துவது போன்று இங்குள்ள அரண்மைகளிலும், பெரிய மாளிகைகளிலும் நடத்துகிறார்கள். மூன்றாவதாக கேரளா இங்கு கோவளம் மற்றும் ஆலப்புழா போன்ற இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் திருமணம் நடைபெறுகிறது.நான்காவதாக அந்தமான் நிக்கோபார் தீவுகள், இங்குள்ள ரீஸாட்டுகளில் அதிகமாக திருமணம் நடைபெறுகிறது. இயற்கையின் மடியில் நீல நிற வானம் மின்ன ,கலக்கம் மில்லாத தெளிவான நீர், பளபளக்கும் தங்கநிற மணல்பரப்புகள் போன்றவை சிறம்பம்சம் பொருந்தியவை. ஐந்தாவதாக கோவா அழகிய கடற்கரைகள், வரலாறு சிறப்புமிக்க தேவாலயங்கள், அழகான ஒய்வு விடுதிகள், பசுமையான காடுகள் போன்ற இயற்கை கொட்டி இருக்கும் இங்கேயும் திருமணங்கள் நடைபெறுகிறது.

இங்கேயும் ஒரு ஜோடி மணமக்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்கள்,அவர்கள் கலிபோர்னியாவில் செங்குத்தான பள்ளத்தாக்கில் 400 அடி உயரத்தில் சிலந்திவலை போன்ற பின்னலை உருவாக்கி அதில் நின்று திருமணம் செய்து கொண்டனர். இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பல இடங்களை சுற்றி பார்த்து இறுதியில் இந்த இடத்தை தேர்வுசெய்து கொண்டனர் என்பதை பாக்ஸ் 24 என்ற ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் திருமண காணொலியை இங்கே காணலாம்..

You may have missed