ரஞ்சிதமே, ரஞ்சிதமே… பாடலுக்கு க்யூட்டாக சிறுமி போட்ட ஸ்டெப்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

குழந்தைகள் எது செய்தாலும் அழகு, குழந்தைகள் முதன் முதலாக பள்ளி சென்று வரும்போது கல்வி கூடத்தில் கற்று கொடுக்கும் பாடல்களை அவர்கள் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கும் போது பாடிக்கொண்டே இருப்பார்கள். நாம் இன்னொரு முறை பாடு என்றால் படமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தோன்றும் நேரத்தில் பாடிக்கொண்டோ, சொல்லிக்கொண்டோ இருப்பார்கள். அது போல் நடனம் ஆடுவதும் அப்படித்தான். மிக இயல்பாக தொலைக்காட்சியில் தோன்றும் பாட்டுகளில் வரும் நடனங்களை அப்படியே ஆடி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்த பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வேளையில் எங்கிருந்தாலும் ஒடி வந்து தொலைக்காட்சியின் அருகில் வந்து நடனம் ஆடி கொண்டிருப்பார்கள். அவர்களின் உலகம் தனியாக சுழன்று கொண்டே இருக்கும். குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை செய்ய யாருடைய உத்தரவும் அவசியம் இல்லை.

எந்த வித சிரமும் இன்றி அவர்களுக்கு பிடித்தை தானாகவே கற்றுக்கொள்வார்கள். ஒரு சில குழந்தைகள் படிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை வேதவாக்கு போல கூர்ந்து கவனித்து வந்து வீட்டில் பெற்றோரிடம் பள்ளயில் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை தெரிவிப்பார்கள். ஒரு சில குழந்தைகள் ரைம்ஸ், பாட்டுடன் சொல்லி தரும் பாடங்களை மிக விரைவில் கற்றுக்கொள்வார்கள், நடனத்தை விடவும் பாடலை நன்றாக பாடி காட்டுவார்கள். இன்னும் ஒரு சில குழந்தைகள் பாட்டோடு கற்று தரும் நடன அசைவுகளை கற்று வீட்டில் பாடலை அரை குறையாகவும், நடன அசைவுகளை முழுமையாக ஆடி காண்பிப்பார்கள். இன்னும் ஒரு சில குழந்தைகள் பள்ளயில் கற்று தரும் விளையாட்டுகளில் பங்கு பற்று பரிசுகள் பெறுவார்கள். குழந்தைகள் ஒவ்வொருவருக்குள்ளும் அசாத்திய திறமை ஒளிந்திருக்கும். எந்த குழந்தைக்கு எந்த திறமை ஒளிந்திருக்கிறது என்று ஆசிரியர்களும், பெற்றோரும் கவனித்து ஊக்கப்படுத்தினால் அவர்கள் வாழ்வில் மிக உயரிய இடத்திற்கு வருவார்கள்.

இங்கேயும் அப்படி ஒரு மூன்று வயது குழந்தை வாரிசு பட பாடலான ரஞ்சிதமே……பாடலுக்கு இளையதளபதி ஆடிய அதே நடன அசைவுகளை ஆடி அசத்தியுள்ளார் இந்த சிறுமி……..தற்போது இந்த சிறுமியின் நடனம் வைரல் ஆகி வருகிறது……அதை கீழே காணலாம்.

You may have missed