பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..!
பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கரகாட்டக்காரன் என்ற தமிழ் திரைப்படத்தை நடித்து அசத்தியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளியில், குழந்தைகள் தின விழா அன்று மாணவர்களை மகிழ்விப்பதற்காக நடித்திருக்கிறார்கள் . 1989-ம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் ஓடி மக்கள் மனதினில் தனி இடம் பிடித்தது.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் கதாநாயகனாக, அறிமுக நடிகையாக கனகா கதநாயகியாக, செந்தில், கவுண்டமணி, கோவைசரளா, வடிவுக்கரசி என பல திரை பிரபலங்கள் நடித்து, இளையராஜா இசைஅமைப்பில் வெளிவந்த இந்த படம் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஓடி பெரும் புகழை ஈட்டியது.
இந்த படத்தில் வந்த பாடல்கள் இன்றய தலைமுறையினரும் ரசிக்க வைக்கும். 80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த படமாக இன்றும் உள்ளது. இதில் வரும் நகைசுவை காட்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. மாங்குயிலே…..பூங்குயிலே ……..பாடல் என்றும் இளமை குன்றாமல் ஒலிக்கும் பாடலாகும். மாரியம்மா……மாரியம்மா ……என்ற பாடலும் அம்மன் கோவில் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது. இத்தனை சிறப்பம்சம் இருக்கும் இந்த படத்தினை ஆசிரியர்கள் பாடலுக்கு நடனம் ஆடி…..நகைசுவை காட்சிகளை நடித்து காட்டி குழந்தைகளை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள். காணொலியை இங்கே காணலாம்