தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..!

குழந்தைகள் அழுதாலோ….பசியில் வாடினாலோ தாயின் உள்ளம் நொந்து போகும். குழந்தைகளின் துன்பத்தை கண்டு மனம் பொறுக்காத உள்ளம் தாயன்பு கொண்ட அன்புள்ளங்கள்……தாயை போன்ற ஒரு தெய்வம் உலகில் இல்லை என்பது நமது மூதாதையர்கள் வாக்கு. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாய் நிச்சயம் இருப்பாள், உலகில் பிறந்தது, முதல் வளரும் வரை உணவு, பாதுகாப்பு, பராமரிப்பு வழங்குவது தாய் தான்.

ஆண் பறவைகள் உணவை தேடி தாய்க்கும், சேய்க்கும் வழங்கும். பருந்து போன்ற பெரிய பறவைகள் குஞ்சுகள் சற்று வளர்ச்சி அடைந்ததும், அலகால் கொத்தி வெளியே தள்ளிவிடும், பார்ப்பதற்கு கொடுமைபடுத்துவது போல் தெரிந்தாலும் அந்த பறவைகள் மற்ற உயிர் கொல்லிகளிடம் இருந்து தப்பித்து தன்னை தான் காப்பாற்றி கொள்ளவும் தன்னுடைய உணவை தானே தேடுவதற்காகவும் பயிற்சி கொடுப்பதற்காகவே அவ்வாறு செயல்படுகிறது. பறவைகள் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் கால அளவு பறவைக்கு பறவை வேறுபடும். அடைகாக்கும் காலத்தில் தாய் பறவை உணவு உட்கொள்ளாது குஞ்சுகள் வளர்ச்சியடைவதிலே கவனத்தை செலுத்தும்.

இந்த காலகட்டங்களில் ஒரு சில இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று போரிடும். குஞ்சுகளை தாக்கவே அல்லது உணவாக உட்கொள்ளவே ஏதேனும் அச்சுறுத்தும் விலங்குகளோ பறவையினங்களோ வந்தாலும் எதிர் நின்று போரிடும். அவைகள் திரும்ப வராதவாறு துரத்தியடிக்கும். இங்கேயும் காணொலியில் அடைகாக்கும் கோழியின் அருகில் கருநாகம் ஓன்று கோழியை தாக்கி முட்டையை உணவாக உட்கொள்ள நேரம் பார்த்து அதனிடம் அருகில் சென்று வேட்டையாட நினைக்கிறது. அமைதியாக பார்த்துகொண்டிருந்த கோழி அருகில் கருநாகம் வந்ததும் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறது. அதை பொருட்படுத்தாமல் மேலும் முன்னேறி கோழியை தாக்க முற்படுகிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற கோழி அலகால் கொத்த……… வந்த வழியை நோக்கி புறப்படுகிறது………..பாம்பு. தாயின் அன்பிற்கும், வீரத்திற்கும் முன்னால் எதுவும் எடுபடாது என்பது இந்த காணொலியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது……பாசக்கார கோழியின் வீரதீரத்தை இங்கே காணலாம்…

You may have missed