சினிமாவுக்கு வரும் முன்பு கல்யாண வீட்டில் கீபோர்டு வாசித்த அனிருத்.. அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

இசையமைப்பாளர் அனிருத் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிரார். படத்துக்கான வேலை தொடங்கும்போதே அனிருத்திடம் கால்ஷிட் வாங்கும் சூழல் இப்போது இருக்கிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் அனிருத் திருமண வீடுகளில்கூட கீபோர்ட்டு வாசித்திருக்கிறார்.

அனிருத் நடிகர் தன்ஷ் நடித்த மூன்று திரைப்படம் மூலம் தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அண்மையில் வெளியான சுப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற காவால பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இன்று திரைப்படத்துறையில் உச்சத்தில் இருக்கும் அனிருத் எட்டு வருடங்களுக்கு முன்பு கல்யாண வீடு ஒன்றில் கீபோர்டு வாசித்திருக்கிறார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அனிருத். கூடவே இந்த வீடியோவை உருவாக்கிய நபருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ…