தேங்காய் முற்றினால் இனி தூக்கி வீசாதீங்க… கொடிய நோய்களுக்கு வேட்டு வைக்கும் தேங்காய் பூ..!

கொடுமையான உடல் உபாதைகளை ஓட, ஓட விரட்டுவதோடு, மனித உடல் நலனுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது தேங்காய்ப்பூ. அது என்ன தேங்காய்ப்பூ என்கிறீர்களா? இதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்..

நன்கு முற்றிப்போன தேங்காயில் இருந்து உருவாகும் கரு வளர்ச்சித்தான் தேங்காய்ப்பூ. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இரட்டிப்பாக்கும். சீசன் நேரத்தில் பரவும் தொற்றுவியாதிகளுக்கும் இது வேட்டுவைக்கும்.

இதேபோல் தேங்காய்பூவில் மனித உடலில் சுகரை எதிர்க்கும் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தியும் இருக்கிறது. இதனால் இது நீரிழிவை கட்டுக்குள் வைக்கிறது. இதயத்தில் தேங்கும் கெட்ட கொழுப்பையும் தேங்காய்ப்பூ கரைத்துவிடும் இவ்வளவு ஏன் இந்த தேங்காய்பூவை ரெகுலராக சாப்பிட்டுவர தைராய்டு பிரச்னையே தீர்ந்துவிடும். இதேபோல் புற்றுநோய் செல்களைத் தூண்டும் ப்ரீ ரேடிக்கல்ஸை நமது உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலும் இந்த தேங்காய்ப்பூவுக்கு உண்டு.

இதயப் பாதுகாப்பு, தைராய்டு பிரச்னையில் இருந்து தீர்வு, புற்றுநோயை நெருங்கவிடாமல் செய்வது என இத்தனை பலனைக் கொடுக்கும் தேங்காய்ப்பூவை இனி மிஸ் செஞ்சுடாதீங்க…

You may have missed