இந்த டிராக்டர் வண்டி டிரைவரின் திறமையைப் பாருங்க…வேற லெவல் தான் போங்க..!

விபத்தே இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய கலை. அதனால் தான் அரசுப்பணியில் கூட விபத்தே இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசும், ஊக்கத்தொகையும் வழங்குகிறார்கள்.

சாலை வாகனத்தை பொறுத்தவரை நாம் ஓட்டிப் படிக்கும் காலம் தொட்டே வளைவில் முந்தக்கோடாது என்பதுதான் தாரக மந்திரமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் பலரும் அதை பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே சாலையில், சில இடங்களில் இது அபாயகரமான வளைவு எனவும் பதாகை வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வளைவில் அடித்துச் செல்வோரும் உண்டு. இதேபோல், இன்னும் சில டிரைவர்கள் இருக்கிறார்கள். கடுகளவுகூட பொறுக்க மாட்டார்கள். ஸ்பீடாக பாய்ந்து செல்வார்கள்.

அதிலும் விவசாய பொருள்களை ஏற்றிச் செல்லும் டிராக்டரை ஓட்டுவது பெரிய கலை. டிராக்டரில் முதல் முறையாக செல்வோருக்குத் தெரியும். அது குலுங்கும், குலுங்கலில் வயிற்று வலியே வந்துவிடும். இங்கேய்ம் அப்படித்தான் வைக்கோல் போரை பெரிய மலை குன்று போல் அடுக்கி வைத்துக்கொண்டு ஒரு டிராக்டரை ஓட்டுகிறார்.

அது அப்படியே டிராக்டரை முன்பக்கமாகத் தூக்குகிறது. கடைசியில் டிராக்டரை இன்னொரு டிராக்டர் வைத்து அசால்டாக இழுத்துச்செல்கின்றனர். அதிலும் இந்த டிரைவரின் திறமையைப் பாருங்கள். வேற லெவல் என்றே சொல்லிவிடலாம்.

You may have missed