நடிகர் நெப்போலியனின் அண்ணனா இது..? அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்காரே… வெளியான புகைப்படம்..!

நடிகர் நெப்போலியனுக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. கிராமத்து கதைக்களத்தில் நெப்போலியன் ஒரு வாசத்தையே ஏற்படுத்தி விடுவார். தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக பெரிதாக தலைகாட்டாத நெப்போலியன் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

நெப்போலியன் கிராமத்து சப்ஜெக்ட்களில் வில்லத்தனம் காட்டியவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர் நெப்போலியன். இவரது மனைவி ஜெயசுதா. இவருக்கு தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் என இருமகன்கள் உள்ளனர். தற்போது இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.

கிராமத்து சப்ஜெட்டில் தொடை தெரியும் அளவுக்கு வேட்டிகட்டி அசத்தலான நடிப்பை வழங்கும் நெப்போலியன், தற்போது ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் ஆகியோர் நடிக்க டேனியல் இயக்கியுள்ளார். அழகி செனிசுலா இதில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நெப்போலியனுக்கு இது இரண்டாவது படம்.

நடிகர் நெப்போலியனின் மூத்தமகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இதனாலேயே இவர் வீல்சேரிலேயே வாழ்க்கையையும் நகர்ந்துகிறார். நெப்போலியன் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தபோதே தன் மகனின் சிகிட்சை, படிப்புக்காக அமெரிக்காவுக்கு போய் குடியேறி இருந்தார்.

வீல்சேரில் இருந்தே இயங்கிவரும் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், பி.ஏ அனிமேஷன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்வாங்கியுள்ளார். இதற்குப்பின்னால் நடிகர் நெப்போலியனின் பத்தாண்டு உழைப்பு இருக்கிறது.ஆயிரக்கணக்கான படங்களை வித்தியாசமாக வரைந்து இப்படி அசத்தியிருக்கிறார் தனுஷ்.

நடிகர் நெப்போலியன் திருமணத்துக்குப் பின்பு உருவான குடும்பக் கதையைப் படித்தோம். நெப்போலியனின் பிறந்த வீட்டுக்கதை இன்னும் சுவாரஸ்யமானது. இவர் அப்போது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் அவரது அண்ணணோடு இருக்கிறார் நடிகர் நெப்போலியன். அதில் அவ அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே இது நெப்போலியனின் அண்ணனா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.