குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..?

நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், சோர்வின்றியும், உற்சாகமாகவும் செயலாற்ற அன்றாடம் குளிப்பது முக்கியம். குளிப்பதினால் உடலில் இருக்கும் கிருமிகளை போக்குவதோடு உடலை ஆரோக்கியமாக பேணவும் வழி வகுக்கிறது. அதிகாலை மற்றும் இரவு தூங்க செல்லும் முன்பு குளிப்பதை பண்டைய தமிழர்களின் பண்பாடாக இருந்தது. காலையில் எழுந்து சுறு சுறுப்பாக பணியாற்றவும், இரவில் போதிய ஒய்வு எடுக்கவும்,நன்றாக தூங்கி எழவும் குளியல் சிறந்த மருத்துவமாக இருந்தது.

வெந்நீரில் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்…..

  • வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ வெந்நீரில் குளிப்பதால் 28/- இதயம் சம்மந்த நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
  • 26/-பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது, மேலும் உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது.
  • தூக்க மின்மை பிரச்சனையால் ஏற்படும் டைப்-2 நீரழிவு நோய் வராமல் தடுக்க தூக்கம் முக்கியம், இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக சூடு நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
  • சூடு நீரில் குளிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது.
  •  ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதயம் இரத்தத்தை திறம்பட உடல் உறுப்புகளுக்கு சீராக செல்ல வழி வகுக்கிறது.
  • மூளை, நரம்பு மண்டலம் சீராக இயங்க வைக்கிறது, மேலும் முதுகு தண்டு  வலிகளை குறைகிறது.
  • வெந்நீரில் குளிப்பதால் உடலின் தூவாரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்கு, உடலில் தேங்கியுள்ள இறந்த செல்களின் அழுக்குகளை நீக்குகிறது.
  • வெந்நீரில் மூலிகைகைகள், வேப்பிலைகள் கொண்டு குளிக்கும் போது உடலில் உள்ள பாக்டீரியாக்கள், நச்சு தன்மை வாய்ந்த கிருமிகள் போன்றவை நீக்கப்படுகிறது. சளி, ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் தீமைகள்….

  • அதிகம் நாம் வெந்நீரில் குளித்தால் தலை முடி உதிர காரணமாயிருக்கிறது.
  • உடல் வறட்சி தன்மை அடைந்து தோல் நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
  • அதிகமாக உடல் வெப்ப நிலை உயருகிறது.
  • குளிர் காலங்களில் கதகதப்பான வெந்நீரில் குளிப்பது நல்லது. கோடை மற்றும் வெப்பம் அதிகரிக்கும் காலங்களில் சாதாரண நீரே குளிப்பதற்கு போதுமானது.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்….

  • சருமம் பளப்பு பளப்பு தன்மை பெறுகிறது.
  • உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
  • தலை முடி நன்றாக வளர உதவுகிறது.
  • உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் வெப்பமாக வைப்பதற்கு உடனடியாக செயல்படுகிறது, மேலும் உடலில் உள்ள கலோரிகள் இதனால் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் தீமைகள்…..

  • சளி, காய்ச்சல் உள்ள நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பது மேலும் நிலைமையை மோசமாக்கும். இதனால் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

You may have missed