கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…!

கரகாட்டம் 80 மற்றும் 90களில் மக்களால் விரும்பி ரசிக்க பெற்ற கலையாகும். கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கரகாட்டம் நடைபெறும். கரகம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட குடத்தை தலையில் வைத்து கொண்டு கீழே விழாமல் தாளத்திற்க்கு ஏற்ப பாடலுக்கு ஒத்திசைந்து ஒருங்கிணைந்து ஆடுவது. மேலும் கரகாட்டத்தில் அதாவது குடத்தில் தண்ணீரை வைத்து அதை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட குடத்தை தலையில் வைத்து பரதத்தில் பின்பற்றும் முத்திரைகளை கரகத்தில் ஆடுவார்கள். பெண்கள் மற்றும் ஆண்கள் குழுவாக சேர்ந்து ஆடுவார்கள். கரகத்தில் இரு வகைகள் உள்ளன. ஓன்று ஆட்ட கரகம் இன்னொன்று சக்தி கரகம்.

ஆட்ட கரகம் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. இது பெரிதும் பொழுது போக்கிற்காக மட்டுமே நடைபெறும். திருவிழா நாட்களில் நடைபெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கரகாட்டம் நடைபெறுவது வழக்கம். சக்தி கரகம் ஆன்மிகத்தில் ஊர்வலத்தில் போது ஆன்மீக பாடலை பாடி பெண்கள் கரகம் எடுத்து ஆடுவார்கள். கரகாட்டம் படம் 80பது களின் இறுதியில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி அவர்களின் நடிப்பில் வெளிவந்து பெரிய திரையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி மக்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை கரகாட்டதை பற்றியதாகவும், இதில்வரும் பாடல்களில் கரகத்தை தலையில் வைத்து ஆடுவார்கள்.

இங்கு ஒரு நிறைமாத கர்ப்பிணி கரகத்தை தலையில் வைத்து லெகுவாக நடனம் ஆடி சமூக வலைதளவாசிகளை மெர்சிலிர்க்க வைத்துள்ளார். அந்த காணொலியை கீழே காணலாம்…..

You may have missed