போலீஸ்க்கு போன் போட்டு பொடியன் கேட்ட ஒரு கேள்வி.. பதிலுக்கு போலீஸ் செஞ்சது தெரியுமா.. உருகவைக்கும் பதிவு..!
‘’காவல்துறை உங்கள் நண்பன்” என தமிழகத்தில் காவல்துறை சார்பில் ஆங்காங்கே எழுதி இருப்பதை பார்த்திருப்போம். இதை வார்த்தையாக காவல் துறை சொல்லிக் கொண்டிருக்க, நிஜத்திலேயே போலீஸ் ஷ்டேசனுக்கு போன் போட்ட பொடியன் ஒருவன், ‘’ஹலோ…என்னோட பிரண்டா இருக்கீங்களா?” என கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்தது இங்கு அல்ல, அமெரிக்காவில். அங்குள்ள புளோரிடா மாகாணத்தின் டல்லஹாசி போலீஸாரின் தொலைபேசிக்கு ஒரு போன் வந்தது. ஏதோ க்ரைம் சம்பந்தமான அழைப்பு என போலீஸார் எடுத்த நிலையில் எதிர்முனையில் பேசியது 6 வயது சிறுவன். அவன் பேசியது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
போலீஸிடம் அவன் பேசியது இதுதான். ‘’நான் தனிமையில் விடப்பட்டு இருக்கேன். எனக்கு ப்ரண்டா இருப்பீங்களா?”என கெஞ்சிக் கேட்டு இருக்கிறான். இதைக்கேட்டு அதிர்ந்த போலீஸார் காலை கட் செய்யவில்லை. அவனது அட்ரஸைக் கேட்டு குறித்துக் கொண்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் வீட்டுக்கு பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருள்களோடு வந்தனர் போலீஸ்காரர்கள். அவனை நேரில் சந்தித்து அதையெல்லாம் கொடுத்ததோடு போலீஸ் ஜீப்பில் அவனை வைத்து ஒரு ரவுண்ட்ம் அடித்தனர். தொடர்ந்து அந்த பொடியனுக்கு அவசர எண் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனவும் வகுப்பெடுத்து சென்று இருக்கின்றனர்.
இருந்தாலும் ஆறு வயசு பொடியனின் மனக்குமுறலுக்கு மருந்திட்ட இந்த அமெரிக்க போலீஸ் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள் தானே? ஒருவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் பொடியனின் தந்தையை விசாரணைக்கு காவல் நிலையம் வரச் சொல்லியிருப்பார்கள் தானே?